217 வளைந்த காலத்தில் வளைந்ததுஅவ் இராமன் கைவரிவில் விளைந்த போரையும் ஆவதும் விளம்புதும் விசையால் புளைந்த பாய்பரி புரண்டன புகர் முகப்பூட்கை உளைந்த மால்வரை உரும்இடிபட ஒடிந்தென்ன சூலம் அற்றன அற்றன சுடர்மழு தொகைவாள் மூலம் அற்றன அற்றன முரண்தண்டு பிண்டி பாலம் அற்றன அற்றன பகழிவெம் பகுவாய் வேலும் அற்றன அற்றன வில்லொடு பல்லம் தொடிதுணிந்தன தோளொடு தோமரம் துணிந்த அடி துணிந்தன கடகளிறு அச்சொடு நெடுந்தேர் கொடிதுணிந்தன குரகதம் துணிந்தன குலமா முடிதுணிந்தன துணிந்தன முளையொடு முசலம் ஒன்றுபத்து நூறாயிரம் கோடி என்றுணரா துன்றுபத்திய இராகவன் சுடுசரம் துரப்ப சென்று பத்திரத் தலையின் மலைதிரண்டென்ன கொன்று பத்தியிற் குவித்தன பிணப்பெருங்குன்றம் கைகள் வாளொடு களம்பட கழுத்தறக் கவச மெய்கள் போழ்பட தாள்விழ வெருவிட நிருதர் செய்ய மாத்தலை சிந்திட திசையுறச் சென்ற தையலார் நெடுவிழியெனக் கொடியன சரங்கள் மாரிஆக்கிய வடிக்கணை வரைபுரை நிருதர் பேரியாக்கையின் பெருங்கரைவயின் தோறும் பிறங்க ஏரியாக்கின ஆறுகள் இயற்றின நிறையச் சோரியாக்கின போக்கின வனம்எனும் தொன்மை அலைமிதந்தன குருதியின் பெருங்கடல் அரக்கர் தலைமிதந்தன நெடுந்தடி மிதந்தன தடக்கைம் மலைமிதந்தன வாம்பரி மிதந்தன வயப்போர்ச் சிலைமிதந்தன மிதந்தன கொடியோடு தேர்கள் சொரிந்தபல் படை துணிபடத்துணிபட சரத்தால் அரிந்து போந்தன சிந்திட திசைதிசை அகற்றி தெரிந்து பார்மகள் நெளிவுற வனம்முற்றும் நிறைய விரிந்த செம்மயிர்க் கருந்தலை மலை எனவீழ்ந்தான் |