218 கவந்த பந்தங்கள் களித்தன குளித்த கைம்மலைகள் சிவந்து பாய்ந்த வெங்குருதியில் திருகிய சினத்தால் நிவந்த வெந்தொழில் நிருதர்தம் நெடுநிணம் தெவிட்டி உவந்த வன்கழுது உயிர்சுமந் துளுக்கியது உம்பர் மருள்தரும் களிவஞ்சனை வளைஎயிற்றரக்கர் கருடன் அஞ்சுறு கண்மணி கரகமும் கவர்ந்த இருள்தரும் புறத்து இழுதையர் பழுதுதறற்கு எளிதே அருந்தரும் திறத்து அறனன்றி வலியதுண்டாமோ எறிந்தார்என எய்தார்என நினைந்தார் எனஎறிய அறிந்தார் என அறியாவகை அயில்வஈளியின் அறுத்தான் செறிந்தாரையும் பிரிந்தாரையும் செறுத்தாரையும் சினத்தால் மறிந்தாரையும் வலித்தாரையும் மடித்தான் சிலைபிடித்தான் வானத்தன கடலின்புற வலயத்தன மதிசூழ் மீனத்தன மிளிர்குண்டல வதனத்தன மிடல்வெங் கானத்தன மலையத்தன திசைசுற்றிய கரியின் தானத்தன காகுத்தன சரம்உந்திய சிரமே ஈரல்செறி கமலத்தன இரதத்திரள் புளினம் வீரக்கரி முதலைக்குலம் விடுபாய்பரி குரம்பாப் பாரக்குடர் மிடைபாசடை படர்கின்றன பலவா மூரித்திரை உதிரக்குளம் முழுகிக் கழுதெழுமே அழைத்தார்சிலர் அயர்ந்தார்சிலர் அழிந்தார் சிலர்கழிந்தார் உழைத்தார்சிலர் உயிர்ததார்சிலர் உருண்டார்சிலர் புரண்டார் குழைத்தாழ் திரைக்குருதிக் கடல்குளித்தார் சிலர் கொலைவாய் மழைத்தாரைகள் படப்பாரிடை மடிந்தார்சிலர் உடைந்தார் எய்தார்பலர் எறிந்தார்பலர் மழஓச்சினர் எழுவால் பொய்தார்பலர் புடைத்தார்பலர் கிடைத்தார்பலர் பொருப்பால் பெய்தார்மழை பிதிர்த்தார்எரி பிறைவாள் எயிற்றரக்கர் வைதார்பலர் தெழித்தார்பலர் மலையாம்என வளைத்தார் தலைசிந்தின விழிசிந்தின தழல்சிந்தின தரைமேல் மலைசிந்தின படிசிந்தின வரிசிந்துரம் மழைபோல் சிலைசிந்தின கணைசிந்தின திசைசிந்தின திசையூடு உலைசிந்தின பொறிசிந்தின உயிர்சிந்தின உடலம் |