பக்கம் எண் :

219

கற்றுற நோக்கினர் தொடர்ந்த சேனையில்
அற்றில தலையெனும் ஆக்கை கண்டிலர்
தெற்றினர் எயிறுகள் திருகினார் சினம்
முற்றினர் இராமனை முடுகு தேரினார்

அழிந்தன தேர்அவர் அவனி கீண்டுக
இழிந்தனர் வரிசிலை எடுத்த கையினர்
ஒழிந்திலர் சரங்களை உருமின் ஏறெனப்
பொழிந்தனர் பொழிகனல் பொடிக்கும் கண்ணினார்

அத்தலைத் தானையன் அளவில் ஆற்றலான்
முத்தலைக் குரிசில்பொன் முடியன் முக்கணான்
கைத்தலைச் சூலமே அனைய காட்சியான்
வைத்தலைப் பகழியால் மழைசெய் வில்லினான்

ஊன்றிய தேரினன் உருமின் வெங்கணை
வான்தொடர் மழையென வாய்மை யாவர்க்கும்
சான்றென நின்றஅத் தரும மன்னவன்
தோன்றல்தன் திருவுரு மறையத் தூவினான்

தூவிய சரமெலாம் துணிய வெங்கனை
ஏவினன் இராமனும் ஏவி ஏழிரு
பூவியல் வாளியால் பொலங்கொள்தேர் அழித்து
ஆவிவெம் பாகனை அழித்து மாற்றினான்

அன்றியும் அக்கணத்து அமரர் ஆர்த்தெழப்
பொன்தெரி வடிம்புடைப் பொருவில் வாளியால்
வன்தொழில் தீயவன் மகுடமாத்தலை
ஒன்றொழித் திரண்டையும் உருட்டினானரோ

அற்ற தாளொடு தோளிலன் அயில்எயிறு இலங்கப்
பொற்றை மாமுழைப் புலாலுடைவாயினின் புகுந்து
பற்ற ஆதரிப்பான்தனை நோக்கினென் பரிவான்
கொற்ற வார்சரத்து ஒழிந்ததோர் சிரத்தையும் குறைத்தான்

திரிசிராஎனும் சிகரம்மண்சேர்தலும் செறிந்த
நிருதர் ஓடினர் தூடணன் விலக்கவும் நில்லார்
பருதிவாளினர் கேடகத்தடக்கையர் பரந்த
குருதிநீரிடை வார்கழல் கொழுங்குடர் தொடக்க