220 கணத்தின் மேல்நின்றவானவர் கைபுடைத்து ஆர்ப்ப பணத்தின் மேல்நிலம் குழிறக் கால்கொடு பறப்பார் நிணத்தின் மேல்விழுந் தழுந்தினர் சிலர்சிலர் நிவந்த பிணத்தின் மேல்விழுந்து ருண்டனர் உயிர்கொடுபிழைப்பார் (திருசிராவதைப்படலம் 15, 18, 20, 23, 26, 51, 61, 74-77, 79, 81, 83, 85, 87, 89,90, 93, 94, 97, 101, 103, 105, 106, 112, 127, 129, 134-136) அனையர் ஆகிய அரக்கரை ஆண்டொழிற் கமைந்த வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்மின் என்ன நினையும் நான் உமக்குரைப்பதும் உண்டுஎன நின்றே துனையும் வாம்பரித் தேரினன் தூடணன் சொன்னான் என்றுதானும் தன்எறிகடற் சேனையும் இறைநீர் நின்றுகாண்டிர் என்நெடுஞ்சிலை வலி எனநேராச் சென்று தாக்கினன் தேவரும் மருள்கொண்டு திகைத்தார் நன்று காத்திஎன்று இராமனும் எதிர்செல நடந்தான் தூடணன்விடு சுடுசரம் யாவையும் துணியா பாடுநின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா ஆடல் கொண்டனன் அளப்பரும் பெருவலியரக்கர் கூடிநின்ற அக்குரைகடல் வறள்படக் குறைத்தான் தேவர் ஆர்த்தெழ முனிவர்கள் திசைதொறும் சிலம்பும் ஓவில் வாழ்த்தொலி நாற்கடல் முழக்கென ஓங்க கா அடா இதுவல்லையேல் நீஎனக் கணைஒன்று ஏவினான் அவன் எயிறுடை நெடுந்தலை இழந்தான் (தூடணன்வதைப்படலம் 1, 8, 12, 21) தம்பி தலையற்றபடியும் தசரதன்சேய் அம்பு படையைத் துணிபடுத்ததும் அறிந்தான் வெம்புபடை விற்கைவிசயக் கரன் வெகுண்டான் கொம்புதலைக் கட்டிய குலக்கரி கடுப்பான் அடங்கலில் கொடுந்தொழில் அரக்கர்அவ் அனந்தன் படங் கிழிதரப்படிதனில் பலவிதப் போர் கடங்கலுழ் தடங்களிறு தேர்பரி தூவித் தொடங்கினர் நெடுந்தகையும் வெங்கணை துரந்தான் |