பக்கம் எண் :

221

எந்திரத்தடந் தேரிழந்தான் இழந்து
அந்தரத்திடை ஆர்த்தெழுந்து அம்பெலாம்
சுந்தரத்தனி வில்லிதன் தோள்எனும்
மந்தரத்தில் மழையின் வழங்கினான்

வரம் அரக்கன் படைத்தலின் மாயையின்
உருமுடைத் தன்மையால் உலகு ஏழையும்
பரம் முருக்கிய பாவத்தினால் வலக்
கரம் எனக்கரன் கண்டமுற் றானரோ
                               (கான்வதைப்படலம் 1, 2, 20, 24)

சூர்ப்பநகை ராவணனோடே முறையிடல்

விருத்தம்-14 - திபதை-6

இங்கு நின்றது உரைத்தும் இராவணன்
தங்கை தன்கை வயிறு தகர்த்தனள்
கங்குல் அன்ன கரனைத் தழீஇ நெடும்
பொங்கு வெங்கு ருதிப்புரண் டாளரோ

அலங்கல் வேற்கை அரக்கரை ஆசறக்
குலங்கள் வேரறுப்பான் குறித் தாழ்கடல்
கலங் குறைத்தெழு கால்எனக் காலினால்
இலங்கை மாநகர் நொய்தின் சென்றெய்தினாள்
                                 (கான்வதைப்படலம் 29, 31)

தங்கையும் அவ்வழித் தலையில் தாங்கிய
செங்கையள் சோரியின்தாரை சேர்ந்திழி
கொங்கையள் மூக்கிலள்  குழையின் காதிலள்
மங்குலின் ஒலிபடத் திறந்த வாயினன்

முடையுடை வாயினள் முறையிட் டார்த்தெழு
கடையுகக் கடல்ஒலி காட்டிக் காந்துவாள்
குடதிசைச் செக்கரின் சேர்ந்த கூந்தலாள்
வடதிசை வாயிலின் வந்து தோன்றினாள்

மடித்தபில வாய்கள்தொறும் வந்து புகைமுந்த
துடித்ததொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்ப
கடித்த கதிர் வாளெயிறு மின்கஞல மேகத்து
இடித்த உரும்ஒத்து உரறி யாவர்செயல் என்றான்