பக்கம் எண் :

222

கானிடை அடைந்து புவிகாவல் புரிகின்றார்
மீனுடை நெடுங்கொடியினோன் அனையர் மேல்கீழ்
ஊனுடை யுடம்புடைமை யோர்உவமை இல்லா
மானிடர் தடிந்தனர்கள் வாள்உருவி என்றாள்

வற்கலையர் வார்கழலர் மார்பின் அணிநூலார்
விற்கலையர் வேதம்உறை நால்வர் தனிமெய்யர்
உற்கலையர் உன்னைஓர் துகள்துணையும் உன்னார்
சொற்கலை எனத்தொலைவில் தூணிகள் சுமந்தார்

தராவலய நேமிஉழவன் தயரதப்பேர்
பராவ அருநலத்தொருவன் மைந்தர் பழிஇல்லார்
விராவ அருவனத்து அவன்விளம்ப உறைகின்றார்
இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் என்றாள்
                 (இராவணன் அணங்குறுபடலம் 24, 25, 29, 50, 54, 57)

சூர்ப்பநகை ராவணன்முன் சீதையை வருணித்தல்

விருத்தம்-15 - தரு-8

ஆரவள் என்னலோடும் அரக்கியும் ஐயஆழித்
தேர்அவள் அல்குல் கொங்கை செம்பொன்செய் குலிகச்செப்பு
பார் அவள்பாதம் தீண்டப்பாக்கியம் படைத்த தம்மா
பேர் அவள்சீதை என்று வடிவெலாம் பேசலுற்றாள்

காமரம் முரலும்பாடல் கள்எனக்கனிந்த இன்சொல்
தேமலர் நிறைந்தகூந்தல் தேவர்க்கும் அணங்காம் என்னத்
தாமரை இருந்ததையல் சேடியாம் தரமும்அல்லள்
யாம் உரைவழங்கும் என்பது ஏழைமைப் பாலதன்றோ

மஞ்சொக்கும் அளகஓதி மழைஒக்கும் வடித்த கூந்தல்
பஞ்சொக்கும் அடிகள்செய்ய பவளத்தின் விரல்கள்ஐய
அஞ்சொற்கள் அமுதின் அள்ளிக் கொண்டவள் வதனம்மைதீர்
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரியகண்கள்

ஈசனார் கண்ணின் வெந்தான் எனும் ஈதிழுதைச்சொல்இவ்
வாசம் நாறோதியாளை கண்டனன் வௌவலற்றான்
பேசலாம் தகைமைத்தல்லாப் பெரும்பிணிபிணிப்ப நீண்ட
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கனவ் உருவமம்மா