223 தோளையே சொல்லுகேனோ சுடர்முகத்து லவுகின்ற வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ மீளவும் திகைப்பதல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன் நாளையே காண்டி அன்றேநானுக் குரைப்ப தென்னோ வில்லொக்கும் நுதல்என்றாலும் வேலொக்கும் விழிஎன்றாலும் பல்லொக்கும் முத்தென்றாலும் பவளத்தை இதழ்என்றாலும் சொல்லொக்கும் பொருள்ஒவ்வாதால் சொல்லலாம் உவமையுண்டோ நெல்லொக்கும் புல்லென்றாலும் நேர்உரைத் தாகவற்றோ இந்திரன் சசியைப்பெற்றான் இருமூன்று வதனத்தோன்தன் தந்தையும் உமையைப் பெற்றான் தாமரைச் செங்கணானும் செந்திரு மகளைப்பெற்றான் சீதையைப் பெற்றாய்நீயும் அந்தரம் பார்க்கின் நன்மைஅவர்க்கு இலைஉனக்கே ஐயா பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத் திருந்தபொன்னை ஆகத்தில் ஒருவன்வைத்தான் அந்தணன் நாவில்வைத்தான் மேகத்திற் பிறந்த மின்னை வென்றநுண் இடையினாளை மாகத்தோள் வீரபெற்றால் எங்ஙனம் வைத்துவாழ்த்தி (இராவணன் அணங்குறுபடலம் 68, 71, 73-76) மாரீசன் இராவணனை இடித்தல் விருத்தம்-16 - தரு-9 கோபமும் மறனும் மானக்கொதிப்பும் என்றினைய வெல்லாம் பாபம்நின்ற இடத்துநில்லா தன்மம்போல் பற்றுவிட்ட தீபம்ஒன்று ஒன்றையுற்றால் என்னலாம் செயலின்புக்க தாபமும் காமநோயும் ஆருயில் கலந்தவன்றே கரனையும் மறந்தான் தங்கை மூக்கினைக் கடிந்துநின்றான் உரனையும் மறந்தான் உற்றபழியையும் மறந்தான், வெற்றி அரனையும் கொண்டகாமன் அம்பினால் முன்னைப்பெற்ற வரனையும் மறந்தான் கேட்டமங்கையை மறந்திலாதான் தாவியது தீதெனாது தையலாளை மெய்யுறப் பாவியாத போதிலாத பாவிமாழை பானல்வாய் காவியான கண்ணிமேனி காணமூளும் ஆசையால் ஆவிசால நொந்துநொந்து அழுங்குவானும் ஆயினான் |