224 வந்தமந் திரிகளோடு மாசறமரபின் எண்ணி சிந்தையில் நினைந்தசெய்யும் செய்கையான் தெளிவில் நெஞ்சன் அந்தரம் செல்வதாண்டோர் விமானத்தில் ஆரும்இன்றி இந்தியம் அடக்கிநின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் (இராவணன் அணங்குறுபடலம் 82, 83, 92, 170) மன்னாநீநின் வாழ்வை முடித்தாய் மதியற்றாய் உன்னால் அன்றீ தூழ்வினைஎன்றே உணர்கின்றேன் இன்னாவேனும் யானிது உரைப்பேன் இதம்என்னா சொன்னான் அன்றே அன்னவனுக்குத் துணிவெல்லாம் அற்றகரத்தோடு உன்தலைநீயே அனல்முன்னில் பற்றினை உய்த்தாய் பற்பல காலம் பசிகூர உற்றுயிர் உள்ளே தேய உலந்தாய் பினையன்றோ பெற்றனை செல்வம் பின்னதிகழ்ந்தால் பெறலாமோ நாரம்கொண்டார் நாடுகவர்ந்தார் நடையல்லா வாரம் கொண்டார் மற்றொரு வன்றன் மனைவாழும் தாரம்கொண்டார் என்றிவர்தம்மை தருமந்தான் ஈரும்கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர்ஐயா அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றான் இந்திரன் ஒப்பார் எத்தனையோர்தாம் இழிவுற்றார் செந்திரு ஒப்பார் எத்தனையோர் நின் திருவுண்பார் மந்திரம் அற்றார் உற்றதுரைத்தாய் மதியற்றாய் செய்தா யேனும் தீவினையோடும் பழியல்லால் எய்தா தெய்தாதெய்தின் இராமன் உலகீன்றான் வைதால் அன்ன வாளிகள் கொண்டுன் வழியோடும் கொய்தான் அன்றே கொற்றம் முடித்துன் குழுவெல்லாம் வெய்யோர் யாரே வீரவிராதன் துணை வெய்யோர் ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கவன்என்றால் உய்வார் யாரேநம்மில் எனக்கொண்டுணர் தோறும் நையா நின்றேன் நீயிது உரைத்து நலிவாயோ நின்றும் சென்றும் வாழ்வன எல்லாம் நிலையாதால் பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாம் புலையாடற்கு ஒன்றும் உன்னாய் என்னுரை கொள்ளாய் உயர்செல்வத்து என்றும் என்றும் வைகுதிஐயா இனிஎன்றான் |