பக்கம் எண் :

225

உஞ்சுபிழையாய் உறவினொடும் எனஉன்னா
நெஞ்சு பறைபோதும் அதுநீ நினைய இல்லாய்
அஞ்சும் எனதாருயிர் அறிந்து அருகுநின்றார்
நஞ்சு நுகர்வாரை இதுநன்று எனலும்நன்றோ

வேதனைசெய் காமவிடம் மேலிட மெலிந்தாய்
தீதுரைசெய்தாய் இனைய செய்கை சிதைவன்றோ
மாதுலனும்ஆம் மரபின் முந்தை உறவந்தேன்
ஈதுரைசெய் தேனதனை எந்தை தவிர்கஎன்றான்
                   (மாரீசன் வதைப்படலம் 8, 9, 11, 12, 15, 18, 24, 26)

லட்சுமணர் பொன்மானைப் பொய்மான் எனல்

விருத்தம்-17 - திபதை-7

தன்மானம் இலாத தயங்கொளிசால்
மின்வானமும் மண்ணும் விளங்குவதோர்
பொன்மான் உருவங்கொடு போயினனால்
நன்மான் அனையாள்தனை நாடுறுவான்

நெற்றிப் பிறையாள் முனம் நின்றிடலும்
முற்றிப் பொழிகாதலின் முந்துறுவாள்
பற்றித்தருக என்பென் என நினையா
வெற்றிச் சிலைவீரனை மேவினளால்

ஆண்டங் கிளையான் உரையாடினனால்
வேண்டும் எனலாம் விழைவன்றிதுஎனா
பூண்துஞ்சு பொலங்கொடி யோய் அதுநாம்
காண்டும் எனவள்ளல் கருத்துணவர்வான்

காயம் கனகம் மணிகால் செவிவால்
பாயும் உருவோடிது பண்பல வால்
மாயம் எனலன்றி மனக்கொளவே
ஏயும் இறை மெய்யல என்றளவே

ஐயநுண் மருங்குல் நங்கை அஃதுரை செய்யஐயன்
செய்வென் என்றமைய நோக்கத் தெளிவுடைத் தம்பிசெப்பும