பக்கம் எண் :

227

மாற்றம் என்பகர்வது மண்ணும் வானமும்
போற்ற வன்திரிபுரம் எரித்தபுங்கவன்
ஏற்றிநின் றெய்தவில் இற்றது எம்பிரான்
ஆற்றலின் அமைவதோர் ஆற்றல் உண்மையோ

பார்க்கஎன் பகர்வது பகழிப் பண்ணவன்
துரக்க அங்கதுபட தொலைந்து சோர்கின்ற
அரக்கன் அவ்வுரைஎடுத் தரற்றினான் அதற்கு
இரக்கம் உற்றிரங்கலீர் இருத்திர் ஈண்டென்றான்
                   (இராவணன் சூழ்ச்சிப்படலம் 2, 4, 5, 7, 9, 11)
 

சீதைக்கும் இராவண சந்நியாசிக்கும் சம்வாதம்

விருத்தம்-19 - திபதை 8

இளையவன் ஏகலும் இறவு பார்க்கின்ற
வளைஎயிற்று இராவணன் வஞ்சம் முற்றுவான்
முளைவரித் தண்டொரு மூன்றும் முப்பகை
தளையரி தவத்தவர் வடிவும் தாங்கினான்

ஊண்இல னாம்என உலர்ந்த மேனியன்
சேண்நெறி வந்ததோர் வருத்தச் செய்கையான்
பாணியின் உழந்திடைப் படிக்கின்றான் என
வீணையின் இசைபட வேதம் பாடுவான்

வெற்பிடை மதம்என வெயர்க்கும் மேனியான்
அற்பின் நல் திரைபுரள் ஆசை வேலையன்
பொற்பினுக் கணியினை புகழின் சேக்கையை
கற்பினுக் கரசியை கண்ணின் நோக்கினான்

இருந்தவன் யாவதிருக்கை இங்குறை
அருந்தவன் யாவன் நீர்யாரை என்றலும்
விருந்தினர் இவ்வழி விரகிலார் என
பெருந்தடங் கண்ணவள் பேசல் மேயினாள்

தயரதன் தொல்குலத் தலைவன் தம்பியோடு
உயர்குலத் தன்னைசொல் உச்சி ஏந்தினான்
அயர்விலன் இவ்வழி உறையும் அன்னவன்
பெயரினைத் தெரிகுதிர் பெருமையீர் என்றாள்