பக்கம் எண் :

229

மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர்தம்மை
மீனென மிளிரும் கண்ணாய் வேர்அறவெல்வர் என்னின்
யானையின் இனத்தையெல்லாம் இளமுயல் கொல்லும் இன்னும்
கூனுகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான்கொல்லும் என்றான்

மின்திரண்டனைய பங்கி விராதனும் வெகுளிபொங்கக்
கன்றியமனத்து வென்றிக்கரன் முதல்கணக் கிலோரும்
பொன்றிய பூசல்ஒன்றும் கேட்டிலிர்போலும் என்றாள்
அன்றவர்க் கடுத்ததுன்னி மழைக்கண்ணீர் ஆலிசோர்வாள்

சீறினன் உரைசெய்வான் அச்சிறுவலிப் புல்லியோர் கட்கு
ஈறுஒருமனிதன் செய்தான் என்றெடுத் தியம்பினாயேல்
தேறுதி நாளையேஅவ் இருபது திண்தோள் வாடை
வீறிய பொழுது பூளைவீஎன வீவன் அன்றே

மேருவைப் பறிக்கவேண்டின் விண்ணினை இடிக்க வேண்டின்
நீரினைக் கலக்கவேண்டின் நெருப்பினை அவிக்கவேண்டின்
பாரினை எடுக்கவேண்டின் பால்நிகர் செஞ்சொல் ஏழாய்
யார்எனக்கருதிச் சொன்னாய் இராவணற் கரிதென் என்றான்

அரண்தரு திரள்தோள்சால உளஎனின் ஆற்றல் உண்டோ
கரண்டநீர் இலங்கைவேந்ததைச் சிறைவைத்த கழற்கால்வீரன்
திரண்டதோள் வனத்தை எல்லாம் சிறியதோர் பருவந்தன்னில்
இரண்டுதோள் ஒருவனன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள்

என்றிவன் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில்
சென்றன திரள்தோள் வானம் திண்டினமகுடம் திண்கை
ஒன்றோடுஒன்றடித்த மேகத்து உரும்என எயிறுதம்மில்
மென்றனவெகுளி பொங்க விட்டது மாயவேடம்

செவிகளைத் தளிர்க்கையாலே சிக்குறச் சேமம் செய்தாள்
கவினும் வெம்சிலைக்கை வென்றிக் காகுத்தன் கற்பினேனை
புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்கெரி புனிதர்ஈயும்
அவியைநாய் வேட்டதெள்ள என்சொன்னாய் அரக்கஎன்னா

புல்நுனை நீரின் நொய்தாப் போதலே புரிந்துநின்ற
என்உயிர்இழத்தல் அஞ்சிஇற்பிறப் பழிதல் உண்டோ