பக்கம் எண் :

230

மின்உயிர்த்து உருமின்சீறும் வெங்கணை விரவாமுன்னம்
உன்உயிர்க் குறுதிநோக்கி ஒளித்தியால் ஓடிஎன்றாள்

அணங்கினுக் கணங்கனாளே ஆசைநோய் அகத்துப் பொங்க
உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவிஉம்பர்க்
கணங்குழை மகளிர்க்கெல்லாம் பெரும்பதம் கைக்கொள் கென்னா
வணங்கினன் உலகந்தாங்கும் மலையினும் வலியதோளான்

வாக்கினான் அன்னான் சொல்ல மாயையால் வஞ்சமான் ஒன்று
ஆக்கினாய் ஆக்கிஉன்னை ஆர்உயிர் உண்ணும் கூற்றைப்
போக்கினாய் புகுந்துகொண்டு போகின்றாய் பொருது நின்னை
காக்குமா காண்டியாயின் கடவல் உன்தேரை என்றாள்

மீட்டும் ஒன்றுரைசெய்வாள் நீவீரனேல் விரைவில் மற்றுன்
கூட்டமாம் அரக்கர்தம்மை கொன்றுங்கை கொங்கை மூக்கும்
வாட்டினார்வனத்தின் உள்ளார் மானிடர் என்றவார்த்தை
கேட்டும் இம்மாயம்செய்தது அச்சத்தின்கிளர்ச்சி யன்றோ
   (இராவணன் சூழ்ச்சிப்படலம் 20, 21, 26, 36, 39, 42, 46, 47, 49,
                     51, 54, 55, 56, 59, 62, 67, 68, 70, 81, 82) 

சடாயு ராவணனுக்குப் புத்திசொல்லுதல்

விருத்தம்-20 - தரு-11

வந்தனன் எருவையின் மன்னன், மாண்பிலான்
அந்திரத் தேர்செலவு ஒழிக்கும் எண்ணினான்
சிந்துரக் கால்சிரம் செக்கர்சூடிய
கந்தரம் கயிலையை நிகர்க்கும் காட்சியான்

ஆண்டுற்று அவ்வணங்கினை அஞ்சல்எனா
தீண்டிற்றிலன் என்றுணர் சிந்தையினான்
மூண்டுற்றெழும் வெங்கதம் முற்றிலனாய்
மீண்டுற் றுறையாடலை மேவினனால்

கெட்டாய் கிளையோடு நின்வாழ்வை எல்லாம்
சுட்டாய் இதென்ன தொடங்கினைநீ
பட்டாய் எனவே கொடுபத்தினியை
விட்டு ஏகுதியேல்விளி கின்றிலையால்