231 பேதாய் பிழைசெய்தனை பேர்உலகின் மாதா அனையாளை மனக்கொடுநீ யாதாக நினைத்தனை எண்ணம் இலாய் ஆதாரம் நினக்கினி யார்உளரோ எல்லா உலகங்களும் இத்திரனும் அல்லாதவர் மூவரும் அந்தகனும் புல்வாய் புலிகண்டது போல்வரலால் வில்லாளனை வெல்லும் மிடுக்குளரோ இம்மைக் குறவோடும் இறந்தழியும் வெம்மைத் தொழில் இங்கிதன் மேலிலையால் அம்மைக்கு அருமாநரகம் தருமால் எம்மைக்கு இதமாக எண்ணினைநீ முத்தேவரின் மூல முதற்பொருளாம் அத்தேவர்இம் மானிடர் ஆதலினால் எத்தேவரோ டெண்ணுவது எண்ணம்இலாய் பித்தேறினை ஆதல் பிழைத்தனையால் புரம்பற்றிய போர்விடையான் அருளால் வரம் பெற்றவும் மற்றுள விஞ்சைகளும் உரம்பெற்றன ஆவன உண்மையினோன் சரம்பற்றிய சாபம் விடுந்தனையே வானாள் பவன்மைந்தன் வளைத்தவிலான் தானேவரின் நின்று தடுப்பரிதால் நானே அவண் உய்ப்பென் இந்நன்னுதலை போநீ கடிதென்று புகன்றிடலும் (சடாயு உயிர்நீத்தபடலம் 6-9, 12-16) சடாயுவுக்கும் ராவணனுக்கும் உயுத்தம் விருத்தம்-21 - தரு-12 கேட்டான் நிருதர்க்கிரை கேழ்கிளர்தன் வாள்தாரை நெருப்புக வாய்மடியா ஓட்டாய் இனிநீஉரை செய்குநரை காட்டாய் கடிதென்று கனன்றுரையா |