232 அக்காலை அரக்கன் அரக்குருக்கு அன்ன கண்ணன் எக்காலமும் இன்னதோர் ஈடழிவுற்றிலாதான் நக்கான் உலகேழும் நடுங்கிட நாகமன்ன கைக்கார் முகத்தோடு கடைப்புருவம் குனித்தான் சண்டப்பிறை வாள்எயிற்றான் சரதாரைமாரி மண்டச்சிறகால் அடித்தான் சிலவள்ளுகிறால் கண்டப் படுத்தான்சில காலனும் காணஉட்கும் துண்டப்படையால் சிலைதுண்டதுண்டங்கள் கண்டான் மீட்டும் அணுகா நெடுவெங்கண் அனந்த நாகம் வாட்டும் கலுழன்என வன்தலை பத்தின்மீதும் நீட்டும் நெடுமூக்கெனும் நேமியன் சேமவில்கால் கோட்டும் அளவில் மணிக் குண்டலம் கொண்டெழுந்தான் ஒத்தான் உடனே உயிர்த்தான் உகுத்தான் அவன்தோள் பத்தொடுபத்தின் நெடும்பத்தியில் தத்தி மூக்கால் கொத்தா நகத்தால் குடையா சிறையால் புடையா முத்தார மார்பின் கவசத்தையும் மூட்டறுத்தான் அறுத்தானை அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு செறித்தான் தடமார்பில் செறித்தலும் தேவர்அஞ்சி வெறித்தார் வெறியாமுன் இராவணன் வில்லைமூக்கால் பறித்தான் பறவைக்கிறை விண்ணவர் பண்ணையார்ப்ப வேகமுடன் வேலிழந்தான் படைவேறு எடாமுன் மாகம் மறையும்படி நீண்ட வயங்குமான் தேர்ப் பாகன் தலையைப் பறித்து படர்கற்பினாள்பால் மோகம் படைத்தான் உளைவு எய்தமுகத்து எறிந்தான் பாய்ந்தான் அவன்பல் மணித்தண்டு பறித்தெறிந்தான் எய்ந்தார் கதித்தேர்பரி எட்டினொடு எட்டும்எஞ்சித் தீய்ந்தா சறவீசி அத்திண்டிறல் துண்ட வாளால் காய்ந்தான் கவர்ந்தான் உயிர்காலனும் கைவிதிர்த்தான் மாச்சிரல் பாய்ந்தென மார்பினும் தோள்கள் மேலும் ஓச்சிச்சிறகால் புடைத்தான் உலையா விழுந்து மூர்ச்சித்த ராவணனும் முடிசாய்ந் திருந்தான் போச்சு இத்தனைபோலும் நின்ஆற்றல் எனப்புகன்றான் |