234 எல்லையில் விசும்பிடை இருந்த நேமியாய் சொல்லிய அறநெறி தொடர்ந்த தோழமை நல்லியல் அருங்கடன் கழித்த நம்பியைப் புல்லுதியோ எனப்பொருமிப் பொங்கினாள் (சடாயுஉயிர்நீத்தபடலம் 44-49) ஸ்ரீராமர் சீதைக்காகத் தம்பியோடிரங்கல் விருத்தம்-23 - திபதை-9 ஏகினன் அரக்கனும் எருவைவேந்தனும் மோகவெந் துயர்சிறிதாறி முன்னியே மாகமே நோக்கினன் வஞ்சன் வல்லையில் போகுதல் கண்டகம் புலர்ந்து சொல்லுவான் வந்திலர் மைந்தர் நன்மருகி எய்திய வெந்துயர் துடைத்தனென் என்னும் மெய்ப்புகழ் தந்திலர் விதியினார் தருமவேலியைச் சிந்தினர் மேல்இனிச் செயல்என் ஆம்கொலோ வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய் செஞ்செவே திருவுருத் தீண்ட அஞ்சுவான் நஞ்சியல் அரக்கியர் நடுவண் ஆயிடை சிஞ்சுப வனத்திடைச் சிறைவைத்தானரோ இந்நிலை இளையவன் செயல் இயம்பினாம் பொன்னிலை மானின்பின் தொடர்ந்து போகிய மன்னிலை அறிகஎன மங்கை ஏவிய பின்னவன் தன்னிலை பேசுவாம் அரோ துண்ணெனும் அவ்வுரை தொடரத் தோகையும் பெண்எனும் பேதைமை மயக்கப் பேதினால் உள்நிறை சோரும் என்று ஊசலாடும் அக் கண்ணனும் இளவலைக் கண்ணின் நோக்கினான் ஓடிவந்தனன் சாலையில் சோலையில் உதவும் தோடிவர்ந்த பூஞ்சுரி குழலாள் தனைக்காணான் கூடுதன் னுடையது பிரிந்து ஆருயிர் குறியா தேடிவந்தது கண்டிலதாம் என நின்றான் |