235 கைத்தசிந்தையன் கனங்குழை அணங்கினைக் காணான் உய்த்து வாழ்தர வேறொரு பொருள் இலான், உதவ வைத்த மாநிதி மண்ணொடும் மறைத்தன வாங்கிப் பொய்த்துனோர் கொளத்திகைத்து நின்றானையும் போன்றான் மண்சுழன்றது மால்வரை சுழன்றது மதியோர் எண்சுழன்றது சுழன்ற அவ் எறிகடல் ஏழும் விண்சுழன்றது வேதமும் சுழன்றது விரிஞ்சன் கண்சுழன்றது சுழன்றது கதிரொடு மதியும் தேரின் ஆழியும் தெரிந்தனம் தீண்டுதல் அஞ்சிப் பாரினோடு கொண்டகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று ஓரும் தன்மை யீதென்பது உரன் இலாதவர்போல் தூரம் போதல்முன் தொடர்தும் என்றிளையவன் தொழலும் ஆமதேஇனி அமைவ தென்றமலனும் மெய்யில் தாம வார்கணைப் புட்டிலும் முதலிய தாங்கி வாம மால்வரை மரன்இவை மடிதர வயவர் பூமிமேல் அவன் தேர்சென்ற நெடுவழி போனார் (சடாயு உயிர்நீத்த படலம் 52, 53, 59, 60, 63, 71, 72, 73, 76, 78) ஸ்ரீராமர் சடாயுவின் மேல் விழுந்து இரங்கல் விருத்தம்-24 - தரு-14 நோக்கினால் ஐய நொய்திவண் எய்திய நுந்தை மூக்கினால் இது முறிந்தமை முடிந்ததால் மொய்ம்பின் தாக்கினான் நடுவடுத்தது தெரிகிலம் தமியன் யாக்கை தேம்பிடும் எண்ணரும் பருவங்கள் இறந்தான் சிலைகிடந்ததால் இலக்குவ தேவர் நீர்கடைந்த மலைகிடந்தென வலியதே வடிவினால், மதியின் கலைகிடந்தன்ன காட்சியன் இது கடித்து ஒடித்தான் நிலைகிடந்தவா நோக்கு என நோக்கினன் நின்றான் மடலுள் நாட்டியதார் இளையோன் சொலை மதியர் மிடலுண் நாட்டங்கள் தீஉக நோக்கினன் விரைவான் உடலுள் நாட்டிய குருதியம் பாவையின் உம்பர் கடலுள் நாட்டிய வரையெனத் தாதையைக் கண்டான் |