பக்கம் எண் :

236

துள்ளி ஓங்கு செந்தாமரை நயனங்கள் சொரிய
தள்ளி ஓங்கிய அமலன் தன்தனி உயிர்த்தந்தை
வள்ளியோன் திருமேனியில் தழல்நிற வண்ணன்
வெள்ளி ஓங்கலில் அஞ்சனமலைஎன வீழ்ந்தான்

தம்தாதையரைத் தனயர் கொலை நேர்ந்தார்
முந்தாரே உள்ளார் முடிந்தானே முன்னொருவன்
எந்தாயே எதற்காகநீயும் இறந்தனையால்
அந்தோ வினையேன் அருங்கூற்றும் ஆனேனே

பின்னுறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள்
தன்னுறுவல் தீர்ப்பான் தனியுறுவது ஓராதே
உன்னுறவு நீதீர்த்தாய் ஓர்உறவும் இல்லாதேன்
என்னுறுவான் வேண்டி இடருறுவேன் எந்தாயே

மாண்டேனேயன்றோ மறையோர் குறைமுடிப்பான்
பூண்டேன் விரதம் அதனால் உயிர் பொறுப்பேன்
நீண்டேன் மரம்போல நின்றொழிந்த புன்தொழிலேன்
வேண்டேன் இம்மாயப் புன்பிறவி வேண்டேனே

என்தாரம் பற்றுண்ண ஏன்றாயை சான்றோயை
கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீகிடந்தாய்
வன்றாள் சிலையேந்தி வாளிக் கடல்சுமந்து
நின்றேனும் நின்றேன் நெடுமரம் போல்நின்றேனே

வடுக்கண்வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும்
எடுத்தனன் ஏகுவானை எதிர்த்தெனது ஆற்றல்கொண்டு
தடுத்தனென் ஆவதெல்லாம் தவத்து அரன்தந்த வாளால்
படுத்தனன் இங்குவீழ்ந்தேன் இதுஇன்று பட்டதென்றான்

பெண்தனி ஒருத்திதன்னைப் பேதைவாளரக்கன் பற்றிக்
கொண்டனன் ஏகநீயிக் கோளுறக் குலுங்கல் செல்லா
எண்டிசை இறுதியான உலகங்கள் இவற்றைஇன்னே
கண்ட வானவர்களோடும் களையுமாறின்று காண்டி
  (சடாயு உயிர்நீத்தபடலம் 82, 83, 85, 92, 93, 95-98, 113, 117)