238 சீதையின் பிரிவாற்றாமல் ஸ்ரீராமர் இரங்கல் விருத்தம்-26 - திபதை-10 இந்தனம் எனையஅன்ன காரகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்திப்பூவும் சிந்தினன் மணலின் வேதிதீதற இயற்றித் தெண்ணீர் தந்தனன் தாதைதன்னைத் தடக்கையால் எடுத்துச் சார்வான் ஏந்தினன் இருகைதம் மால்ஏற்றினன் ஈமம்தன்மேல் சாந்தொடு மலரும்நீரும் சொரிந்தனன் தலையின்சார காந்தெரி கஞலமூட்டி கடன்முறை கடவாவண்ணம் நேர்ந்தனன் நிரப்பும் நன்னூல் மந்திரநெறியில் வல்லான் தளிர்த்தன அனைய மேனித்தாமரைக் கெழுமுசெந்தேன் துளித்தன போலநீங்காத் துள்ளிசேர் வெள்ளக்கண்ணன் குளித்தனன் கானயாற்றில் குளித்தபின் கொண்டநல்நீர் அளித்தனன் அரக்கர் செற்றசீற்றத்தான் அவலந்தீர்ப்பான் (சடாயுஉயிர்நீத்தபடலம் 134, 135, 136) மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன் துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன் பொடித்த தண்தளிர்ப் பூவொடு மால்கரி ஒடித்த கொம்பனையாள் திறத்து உன்னுவான் வாங்குவில்லன் வரும்வரும் என்றுஇரு பாங்கரும் நீள்நெறி பார்த்தனளோ எனும் வீங்கும் வேலை விரிதிரையாம் என ஓங்கிஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான் பூண்ட மானமும் போக்கருங் காதலும் தூண்ட நின்றிடை தோமுறும் ஆருயிர் மீண்டு மீண்டு வெதுப்ப வெதும்பினான் வேண்டுமோ எனக்கு இன்னமும் வில்என்பான் கூதிர் வாடைவெங் கூற்றினை நோக்கினன் வேத வேள்வி விதிமுறை மேவிய சீதை என்வயின் தீர்ந்தனளோ எனும் போதகம் எனப் பொம்என் உயிர்ப்பினான் |