239 நீண்ட மாலை மதியினை நித்தலும் மீண்டு மீண்டு மெலிந்தனை வெள்குவாய் பூண்ட பூணவள் வாள்முகம் போதர ஈண்டு சால விளங்கினை என்னுமால் மயிலும் பெடையும் உடன்திரிய மானும்கலையும் மருவிவரப் பயிலும் பிடியும் கடகளிறும் வருவதிரிவ பார்க்கின்றான் குயிலும் கரும்பும் செழுந்தேனும் குழலும் யாழும் கொழும்பாகும் அயிலும் அமுதும் சுவைநீத்த மொழியைப்பிரிந்தால் அழியானோ (அயோமுகிப்படலம் 9-11, 13, 15, 20, 29) கவந்தன் வதையும் துதியும் விருத்தம்-27 -திபதை-11 அவ்விடை எய்திய அண்ணல் இராமன் வெவ்விடை போல் இளவீரனை வீர இவ்விடை நாடினை நீர்கொணர்க என்றான் தெவ்விடை வில்லவனும் தனிசென்றான் எங்கணும் நாடினன் நீரிடை காணான் சிங்கம்எனத் தமியன் திரிவானை அங்கவ் வனத்துள் அயோமுகி என்னும் வெங்கண் அரக்கி விரும்பினள் கண்டாள் மோகனை என்பது முந்தி முயன்றாள் மாகநெடுங்கிரி போலியை வவ்வா ஏகினள் உம்பரின் இந்துவொடு ஏகம் மேகம் எனும்படி நொய்தினின் வெய்யாள் பேர்ந்தான்நெடு மாயையினிற் பிரியா ஈர்ந்தான் அவள்நாசி பிடித்து இளையோன் சோர்ந்தாள் இடுபூசல் செவித்துளையில் சேர்ந்தார் தலுமே திருமால் தெருளா பரல்தரு கானகத்து அரக்கர் பல்கழல் முரற்ரு வெஞ்சமம் முயல்கின்றார் எதிர் உரற்றிய ஓசையன்று ஒருத்தி ஊறுபட்டு அரற்றிய குரல் அவள் அரக்கியே கொலாம் (அயோமுகிப்படலம் 38, 39, 58, 77, 78) |