24 சொன்ன தானப் பலன்எனச் சொல்லுவர் மன்னி ராமன் கதைமற வார்க்கரோ (மிகைப்பாடல் 19, 20) அவையடக்கம் விருத்தம்- 5, 6 தரு-5 ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக் காசில் கொற்றத்து இராமன் கதையரோ நொய்தின் நொய்யசொல் நூற்கலுற் றேன்எனை வைத வைவின் மராமரம் ஏழ்துளை எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை செய்த செய்தவன் சொல்நின்ற நேயத்தே (பாயிரம் 4, 3) |