25 ஸ்ரீ ஸ்ரீராமஜெயம் முதலாவது பாலகாண்டம் கடவுளர் வணக்கம். விருத்தம் -1 ஆதியாய் நடுவாகி முடிவுமாகி அண்டப கிரண்டமுமாய் அனைத்துமாகிப் போதினைஆ லினைவெற்றிப் பொருப்பை விட்டுப் புகழ்பொறைகள் தருமமெலாம் பொலிந்துநல்ல நீதிசேர் அயோத்தியில்வாழ் தசர தேந்திரன் நெடியமா தவத்தினில்வந் துதித்தஎங்கள் சோதியா கியராமன் நாடகத்தைச் சுயஞ்சொல் வான்மகிழ்ந்து தோடயஞ் சொல்வேனே. தோடயம்-1 நாட்டை ராகம் சம்பை தாளம் சரணங்கள் எவரும் வணங்கிய ரகுராமன் எதுவும்நினைத்தது தருராமன் ரவிகுலசுந்தர செயராமன் நாடகத்தைச் சொல்லவே ஆஆ! கவளநெடுங்கர தலசாமி கமலதிரியம்பகம் உளசாமி பவனிவரும்கெச முகசாமி பாதபற்பந்துணையே செய செயா! துணிவுள புசபெல ராவணே சுரன்முடி பொடிபட மோதுமால் அணிபெறு தசரத ராமநா டகமதுஉரைசெயவே ஆஆ! திணிதரு புயமிரு நாலுசேர் திசைமுகன் இசைபெறு நாவில்வாழ் மணமிகு சரஸ்வதி பாததா மரைஎனதுதுணையே செய செயா! கோனொடு வானவர் தேடவொரு கோசலை யாள்விளைாட வரு ஞானகிரு பாகர ராமகதை நாடகமா சொலவே ஆஆ! வானவ னாம்மண வாளமுனி மாருதி நீர்கரு டாதிபதி சேனையர் கோனுடனே பதின்மர் சேவடிகள்துணையே செய செயா! |