26 வாசவன்மாசுரரொடு லோகாந்திர வாசிகள் பூசுரர் இவர் ஏகாந்த பூசிதராகவனிட ஆராய்ந்த புகழது உரைசெயவே ஆஆ காசினி மீதினில் மிகுமூடாந்த காரம தோடவே வருவேதாந்த தேசிகர் தாமரைமலரே போன்ற திருவடிகள் துணையே செய செயா திருமகள் சானகிசேரும் வாமன் செயமொடு கோசலம் வாழும் நேமன் கருமணியே நிகர்ஆகும் ராமன் கதையது உரைசெயவே ஆஆ! குருகையில் மேவிய காரிமாறர் குணநிதியாகிய பஷியகாரர் மருளறு தேசிகர் மாசிலாத மலரடிகள் துணையே செயசெயா மைக்கடல் வாய்விண்டு பொங்கவே வைத்தொரு பாணம் துரந்தமால் விக்ரமராமன் பிரபந்தம் ஆம் விந்தையது சொலவே ஆஆ பக்குவமாம் அன்பு கொண்டுவாழ் பத்தரைஆளும் திறங்கள்சேர் சக்கர கோதண்டம் தண்டம்வாள் சங்கம்இவை துணையே செய செயா. _____ அரசியல் கீட்டியம்-வசனம் அதோ ராசாதிராசன் மகாதேசப் பிரகாசன் ராச பரமேசுரன் தேசநிர மீசுரன் ராச மார்த்தாண்டன் ரணரங்கோத் தண்டன் ராச கெம்பீரன் நேச கம்பீரன் பாஸ்கர குலதீரன் சிலாக்யமுள வீரன் புத்தியில் பிரகஸ்பதி வித்தையில் சரஸ்வதி நயகுண சீலன் பயசன பாலன் நல்லார்க்கு மித்துரு பொல்லார்க்குச் சத்துரு சுசரிதகுண நேசன் தசரத மகராசன் மனுநீதி கோணாமல் சனவேதை தோணாமல் ஆறில்ஒரு கடமைகொண்டு மாறுபடு பகையை வென்று திங்கள்மும் மாரிபெய்ய எங்கும் முப்போகஞ் செய்ய செங்கோல் முகம்சாயாமல் வெங்கோல்முகம் பாயாமல் அறுபதினாயிரம் வருஷம் பசுவும் புலியும் ஒருதுறையில் நீர்உண்ண ராச்சிய பரிபாலனம் பண்ணின கீர்த்தியைச் சொல்லுகிற மார்க்கம் |