27 விருத்தம்-2 மகராசன் அசமகா ராசன் ஈன்ற மகராசன் மிகுசூரிய வங்கிச ராசன் சுகராசன் கௌசலைநா யகியைகேசி சுமித்திரையாம் தேவியர்கை தொட்டராசன் மிகராசர் பணிந்திட இந்திரனைக் காத்த விசயதசரத ராசன் அயோத்தி வாழும் செகராசன் ஒருவன்மனு நீதி யாலே தேசமெல்லாம் ஒருகுடைக்கீழ்ச் செய்தாண் டானே தரு-1 சாவேரி ராகம் திரிபுடை தாளம் பல்லவி ராசரா சர்க்கும் ராசன் - தசரத ராசன் இருந்தானே (ராச) அநுபல்லவி தேச திலகன்அ யோத்தி நகர்க்கொரு திலகன் ரவிகுல திலகன் ஆகவே (ராச) சரணங்கள் மந்திர தந்திரமும் நித்திய நைமித்தமும் மகங்களும் தினம் செழிக்கவே வன்புலி யோடு பசுவும் ஓர்துறை நீர் உண்டு கொண்டு பயம் ஒழிக்கவே இந்திர பதமும் குபேர தனங்களும் எவரும் சிறிதென்று பழிக்கவே எங்கெங்கும்முப் போகம் விளையவே திங்கள்தோறும் மும்மாரி கொழிக்கவே (ராச) நாலு வர்ணா சிரமங்களும் சொன்ன நடை புரண்டு பாயாமலே நரர்க்கும் வேறுள உயிர்க்கும் வயதுகள் நடுவிலே தேயாமலே கோலமாகிய மிருகமும் பறவையும் குறிகடந்து மேயாமலே |