242 நின்செய்கை கண்டுநினைந்தன வோநீள்மறைகள் உன்செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ என்செய்தேன் முன்னம் மறம்செய்கை எய்தினார் பின்செல் வதில்லாப் பெருஞ்செல்வம் நீதந்தாய் மாயப்பிறவி மயல்நீக்கி மாசிலாக் காயத்தை நல்கிதுயரின் கரையேற்றி பேயொத்த பேதை பிணக்கறுத்தஎம் பெருமான் நாயொத்தேன் என்ன நலனிழைத்தேன் நானென்றான் சந்தப்பூண் அலங்கல் வீரதனுவெனும் நாமத்தேன்ஓர் கந்தர்ப்பன் சாபத்தால் இக்கடைப்படு பிறவி கண்டேன் வந்துற்றீர் மலர்க்கை தீண்டமுன்னுடை வடிவம்பெற்றேன் எந்தைக்கும் எந்தைநீர் யான்இசைப்பது கேண்மின்என்றான் பழிப்பறு நிலைமை ஆண்மை பகர்வதென் பதுமபீடத்து உழிப்பெருத் தகைமைசான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் அழிப்பதற்கு ஒருவனான அண்ணலும் அறிதிர் அன்றே ஒழிப்பருந் திறல்பல்பூத கணத்தொடு உறையும் உண்மை ஆயது செய்கைஎன்பது அறத்துறை நெறியின் எண்ணி தீயவர்ச் சேர்கிலாது செவ்வியோர்ச் சேர்ந்து செய்தல் தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட் டன்னாள் ஏயதோர் நெறியின் எய்தி இரலையின் குன்றம் ஏறி கதிரவன் சிறுவனான கனகவாள் நிறத்தினானை எதிரெதிர் தழுவிநட்பின் இனிதமர்ந்து அவனின் ஈண்ட வெதிர்பெருந் தோளினாளை நாடுதல் விழுமிதென்றான் அதிர்கழல் வீரர்தாமும் அன்னதே அமைவதானார் (கவந்தன்வதைப்படலம் 1, 5, 17, 33, 35, 36, 40-48, 51, 53, 55) ஸ்ரீராமர் சவரிக்கு முத்தியருளி அப்பால் ஏகல் விருத்தம்-28 அன்னதாம் இருக்கைநண்ணி ஆண்டுநின்றளவில் காலம் தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத் தலைப்பட் டன்னாட்கு இன்னுரை யருளித் தீதின்றிருந்தனை போலும் என்றான் முன்னிவற்கு இதுஎன்றெண்ணல் ஆவதோர் மூலம் இல்லான் |