243 அனகனும் இளையகோவும் அன்றவண் உறைந்த பின்றை வினையறு நோன்பினாளும் மெய்ம்மையின்நோக்கி ஐய துனைபரித் தேரோன்மைந்தன் இருந்த அத்துளக்கில் குன்றம் நினைவரி தாயற்கொத்த நெறியெலாம் நினைந்து சொன்னாள் பின்னவள் உழந்தபெற்ற யோகத்தின் பெற்றியாலே தன்னுடல் துறந்து தானத்தனிமையின் வீடுசேர்ந்தாள் அன்னது கண்டவீரர் அதிசயம் அளவின்எய்தி பொன்னடிக் கழல்கள் ஆர்ப்பப்புகன்ற மாநெறியிற் போனார் (சவரிபிறப்புநீங்குபடலம் 2, 6, 8) ஆரணியகாண்டம் முற்றிற்று. |