பக்கம் எண் :

244

 

ஸ்ரீராமஜெயம்

நான்காவது

கிஷ்கிந்தாகாண்டம்

அனுமார் மறைந்து நின்று யோசித்தல்

விருத்தம் 1

சவரிசொன்ன வழிபிடித்து ராமனும் தம்பியும் நடக்கத்
     தான்கண் டேகிக்
கவலைகொண்டு சுக்ரீவன் விடஅனுமான் மறைந்துநின்று
     கருதிப்பார்த்தான்
தவவடிவர் வரிசிலையர் புரிசடையவர் இளங்குமரர்
     தருமசீலர்
இவர்எவரோ என்றுசொல்லிக் கண்ணுவான் யோசனையால்
     எண்ணுவானே

திபதை-1

சங்கராபரணராகம்                         ஆதிதாளம்

கண்ணிகள்

1. இன்னார் இனியார்என்று       தெரியேனே-புண்ணியம்
  என்னசெய்தேன் இவர்கள்      வரத்தானே

2. இங்கே என் கண்ணின் முன்னே உரித்தாரே-வந்து
  கங்கை உதித்தாற்போலே       குதித்தாரே

3. காளைப் பருவத்திந்த         காட்சிதந்தாரே-இவர்
  வேளைக்குத் தக்கவேஷம்      கொண்டுவந்தாரே

4. தேவர்க்கும் தேவர்இவர்       என்றுசொல்லவோ-அவர்
  மூவர் இவர்இரண்டு           பேர்கள் அல்லவோ

5. அசங்காத பலர்உள்ள         சிலாக்கிய வான்கள்-இவர்
  பசும்புல் தேயநடவா           பாக்கியவமான்கள்