பக்கம் எண் :

245

6. எல்லா வல்லமையும்      செய்யஉரியோர்-இவர்
  கல்லாக் கலைகளெல்லாம்  கற்றபெரியோர்

7. பிராண சஞ்சீவிபோலே   ஒன்றை விடுத்தார்-தங்கள்
  திராணியால் அதைத்தேடி இங்கே அடுத்தார்

8. அடைவான மூப்பிளமை   பூணுகிறாரே-இவர்
  உடலும் நிழலும்போலக்   காணுகிறாரே

9. வளைத்த வில்லும் அம்பும்கைக் கொண்டபடையோர்-இவர்
  இளைத்த பேர்களைக் கைதூக்கும் எண்ணம்உடையோர்

10. கல்லும் முள்ளும் மல்லிகை    மலர்போலே-இவர்
  செல்லக் குளிருதையோ        விழிமேலே

11. குவடும் காடும் செடிக         ளும்புரியுதே-அய்யோ
  இவரைக் கண்டுபேயும் கண்     ணீர்சொரியுதே

12. பறவைகளும் கரைந்து         முகம் வாடுதே-இவர்க்கு
  சிறகை விரித்து மேலே         பந்தல்போடுதே

அனுமார் ஸ்ரீராமருக்கு வரலாறு கூறுதல்

விருத்தம்-2

    மாசகல இந்தவண்ணம் எண்ணிச்சின்ன
          வன்னிவடி வுடன்நின்றான் நீஆர்பிள்ளாய்
    பேசெனவே வாயுமகன் அனுமான் என்பேர்
          பெருமலையில் வாலியினால் சுக்கிரீவன்
    ஆசகல ஒளிந்திருப்பான் தேவரீரை
          அறிந்துவர என்னைவிட்டான் வந்தேன் என்னத்
    தாசரதி சுக்ரீவன் எங்கே என்று
           தான்சொல்ல வணங்கி அனுமான் சொல்வானே

தரு-1

சுருட்டிராகம்                             ஆதிதாளம்

பல்லவி

     சுக்ரீவன் பேர்நீ சொன்னபோதே-அவன்
     சகுர்தம் அல்லவோ சுகுர்தம்               (சுக்)