246 அநுபல்லவி தற்காலத்தில் பாலால் முலைவிம்மத் தாயானவள் பிள்ளைபேர் சொல்லி அழைத்தாற்போல் (சுக்) சரணங்கள் 1. பட்ட மரந்துளிர்க்கும் உங்கள் வச னத்தாலே பரிந்தீரோ அவனுக்குப் பயம்உண்டோ இனிமேலே வெட்டுணி வாலிஎன்னும் கோடைகொண் டொருக்காலே வெதும்பிய பயிர்க்கொரு மேகம்இறைத் தாற்போலே(சுக்) 2. படைத்தபுவியும் சொந்தமனைவி தன்னையும் விண்டு பதைக்கிறான் செடியில்லா கொடிபோலவே துவண்டு அடைக்கலம் தந்தால்உமக் கனந்தம் பலன்கள் உண்டு ஆர்க்குக் கிடைக்கும் உங்கள் அருமைக் கனிவாய் கொண்டு(சுக்) 3. பலமிக்க வாலியெனும் தறிதும்புக் காளையிலே பருத்தி பட்டபாடெல்லாம் பட்டோமோ நீளையிலே மலையிற்று மயிரிலே தொங்குகிற வேளையிலே வந்திரே என்னதவம் செய்தோம்முன் நாளையிலே(சுக்) 4. கோரவாலி விடுக்க வந்தீர்இன் றென்னசங்கை கொண்ட எங்களை ஆண்டுகொள்வ துமதுபங்கு ஆரென்று கேட்கிலுமை என்னசொல் வேனங்கே அடியேனும் அவனாலே அனுப்பவந் தேனேஇங்கே(சுக்) அனுமார் தேற்றச் சுக்கிரீவன் சரணடைதல் விருத்தம்-3 அனுமான் இப்படிச்சொல்ல அயோத்தி தன்னில் அய்யன் உதித்தது முதலாச் சீதைபோன மனவேதை கடைசியா நடந்தவாறே வருந்தி யிளையோன் சொல்ல அறிந்துகொண்டான் கனமான விசுவரூபங் காண்பித்தான் கவிக்குலவேந் தனையும் காண்பிப்பேன் என்று தனதாம்தன் அரசனுடனேபோய் எல்லாம் சாற்றினான் அவன்கவலை மாற்றினானே |