247 திபதை-2 புன்னாகவராளிராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. குணசம்பிரம தீரர் ராமலட்சு மணர்என்றிருவீரர் அவர்தம்மை மணமா அடுத்தவர்க்கு மறுசுகந்தேடுமோ க்ஷணமாகிலும் விட்டுப் பிரியவும்கூடுமோ 2. கண்டேன் கண்டேனே ஆனந்தம் கொண்டேன் கொண்டேனே நல்ல புண்டரீகக் கண்ணனே அந்தமூர்த்தி மண்டலீதனவனே தம்பிவாய்த்தவன் 3. சத்துரு என்பது துடைத்தோர் விசுவா மித்திரன் கையம்பு படைத்தோர் வெகு வெற்றிமருவு கீர்த்தி மேவியகுணசீலர் சித்திபெறும் அயோத்தி தெசரதராசன்பாலர் 4. குடிலத்தாடகைமேலே அம்புபோட ஒடிபட்ட மரம்போலே விழுந்தாளே அடிபட்டவுடன் அந்த அகலிகை எழுந்தாள் சடிதிக்குள் கௌதமர் சாபமும் ஒழிந்தாளே 5. ஒடுக்கி ஒடுக்கிச் சொன்னாலும் ராமன் கீர்த்தியை அடக்கப்போமோ என்னாலும் மிதிலையில் மிடுக்குடன் உருத்திரன் தடக்கைவில்லறிந்தானே எடுத்தாற்போல் எடுத்தானே ஒடித்துவிட்டெறிந்தானே 6. மாமணம் நிறை வேற்றி பரசு ராமன் கெருவம்மாற்றி அயோத்தி கோமுடி தன்னைராமன் கொடுத்தானே தம்பிக்கங்கே நாமெல்லாம் ஈடேற நடந்துவந்தானே இங்கே 7. முன்னே விராதன்மடிந்தான் ராமன் அம்பாலே பின்னே கரனும் முடிந்தான் இதுவல்லாமல் வன்மாரீசனுக்கும் வாளிதொடுக்கலாச்சே பொன்மான் செத்தஇடம் புல்லுமுளைத்துப் போச்சே |