பக்கம் எண் :

248

8. எடுப்புள்ள பெரியோரே       கவந்தனை
     அடித்தாரே எதிர்நேரே     இவரே
  அடுக்களை கிணற்றிலே        அமுதம் எழுந்தாற்போலே
     கிடைத்தாரே ஒருவர்க்குக்   கிடைக்குமோ இதுபோலே

9. அலைவாய்த் துரும்பெனவே    நித்தம் நித்தம்
     மலைபோல் விசாரம்தின்னவே மெத்த மெத்த
  பலநாளிலும் பட்ட            பாடெல்லாம் விண்டோமே
     நலமாக வாலிக்கொரு       நமனையும் கண்டோமே

10. ராசன்மகனே ஏன்டா          பலவல
     யோசனை பண்ண வேண்டா வரந்தரும்
  ஈசுரன் உன்பங்கில்            இருந்தானே இருந்தானே
     பூசைசெய்தாய் என்றிப்      போதல்லோ தெரிந்தேனே

11. சுகம்கண்டு மேவலாமே        அவர்மலர்
     முகங்கண்டாற் பாவம்போமே சுக்கிரீவா
  புகுந்தவர் சேவைகாணப்        புத்திமுத்தியும் தரும்
     இகபரம் இரண்டிலும்        எதுநினைந்தாலும் வரும்

12. இக்கதை அன்றுவீறி            அனுமான் சொல்ல
     சுக்கீரீவன் மனந்தேறிப்        புறப்பட்ட
  அக்கணம் ஒருமனதாகவே        துணிந்தானே
     மைக்கடல் வண்ணன் ராமனை  வந்துபணிந்தானே

13. பணிந்தவன் தன்னைப்பார்த்து  ரகுநாயகன்
     அணிந்த கண்கிருபை பூத்துச் சுக்கிரீவா
  பிணங்கும் வாலிக்கு வில்லும்    பிடித்தேன் என்றெடுத்தேனே
     இணங்கும் உன்னைரட்சிப்பேன் என்றுகை கொடுத்தேனே

ஸ்ரீராமர் சுக்கிரீவனுக்கு ஆதரணை சொல்லல்

விருத்தம்-4

    சரணமென இப்படியே சுக்ரீவன் சொல்லச்
          சாமி அபயங்கொடுத்தான் அனுமான் தானும்
    முரணுள வாலிக்கும்ஓர் அரக்கனுக்கும்
          முன்புசண்டை வரலாலே தம்பிதன்னை