பக்கம் எண் :

249

    உரனழித்து மண்ணையும் பெண்ணையும் கைக்கொண்டே
          ஓட்டிவிட்டான் இவனிங்கே ஒதுங்கினான்உன்
    பரமெனவே தாரம்எடுத்ததையே எண்ணிப்
          பாவிப்பான் ரகுராமன் கோவிப்பானே

திபதை-3

தோடிராகம்                              அடதாளசாப்பு

கண்ணிகள்

1. சுக்கிரீவா உன் மனக்கிலேசங்கள்
     எனக்கே ஆம் அது             தீரடா
  இக்காலத்தில் முடுக்காம் வாலியை
     வதைக்க நீயது                 பாரடா

2. பெருவாலிக்குள் தலைசாயக்கணை
     பிசகாதப்படி                   தொடுக்கிறேன்
  அரைநாழிக்குள்ளே முடிசூடிப்புவி
     அரசாளக்குடை                 கொடுக்கிறேன்

3. துடுக்கா மனைவியை எடுத்தான் எனஉரை
     கொடுத்தாய் அவனைஇந்         நேரமே
  கெடுத்தேன் அவன்முடி பொடிக்காவிடில் வில்லை
     எடுத்தாள்வதில் என்ன           சாரமே

4. உடைந்தே சரண்என அடைந்தோர்களை முற்றும்
     தொடர்ந்தா தரித்திட            வேணுமே
  கடும்போரினிலே கைவிடும் போதினில் இந்த
     உடம்பால் என்பயன்        காணுமே

சீதை ஆபரணங்களைக் கண்டு ஸ்ரீராமர் இரங்கல்

விருத்தம்-5

    அண்ணல் ராகவன் சுக்கிரீவனுக் கிவ்வாறே
          அனுக்கிரகித்து வாலி சோதனைக்கு வேண்டி
    வண்ணமரா மரம்ஏழும் அம்பால் எய்து
          வழியிலே துந்துபிதன் எலும்பைக் கண்டு