250 திண்ணன்எனும் தம்பியினால் கிளப்பி விட்டுத் தேரினிலே போம்சீதை முடிந்து போட்ட துண்ணெனும் ஆபரணங்கள் காட்டக்கண்டு துடிக்கின்றான் சாமிகுறை படிக்கின்றானே திபதை-4 கண்டாராகம் அடதாளசாப்பு கண்ணிகள் 1. நின்று தெரிந்து குலமடந்தையர் தக்களைக் கொண்டீரோ-இல்லையோ கணவன் இருந்தும் உடைமை எறிந்த பெண்களைக் கண்டீரோ 2. அரசிலே மணிமுடி சுமந்துஉல கங்கொள நாடினேனே-ஐயையோ சிரசிலே முடிசுமந்தொரு பெண்பழி சூடினேனே 3. தசரதன் தபசுகள் புரிந்துவ ரும்பாலன் ஆனேனே-ஐயையோ மிசைபடும் சுவையுள கரும்பில் வெறும்பூ ஆனேனே 4. வாரிதி தந்தவர் கங்கை அழைத்தவர் மரபில் வந்தேனே-ஐயையோ பாரியை ஆனாலும் ரட்சணை செய்யப் படாமல் மெலிந்தேனே 5. மங்கை எனைப் பார்க்க நான்முகச் சோடைக்கு மாற்றிட்டுத் தீர்ப்பேனோ-ஐயையோ அங்கிங்கும் பார்த்தேன் வனம் பார்த்தேன் இனி ஆர்முகம் பார்ப்பேனோ 6. வீண்பணிதி ஏதுக்கார் என்னைமீட்பவர் மேல்என் றறிந்தாளோ-ஐயையோ ஆண்பிள்ளை அல்லநான் பெண்பிள்ளை என்றெண்ணி அணியை எறிந்தாளோ |