251 7. அவளுக்குநானும் எனக்கவளும் பூட்டும் ஆரங்கள் பூண்பேனோ-ஐயோஅவள் பவளக் கனிவாயும் முத்துநகையும் நான் பரிந்தென்று காண்பேனோ 8. பணிதி இங்கிது சனகிஅங்கம்நி றைந்திடச் சேர்வேனோ-ஐயோஅவள் குணசௌந்தரிய மலர்முகங் கண்டு கண்களி கூர்வேனோ 9. குலந்தரும் கொடியுடன் தவஞ்செய்து போந்தேன் என்பேனோ இலங்கையில் விட்டு வெறுங்கையாய் வந்து சேர்ந்தேன் என்பேனோ-ஐயையோ 10. இல்லாளை விட்டு வல்லாண்மைபேசி இன்னம் இருந்தேனே-ஐயையோ புல்லாளைச் செய்து கொல்லையிலே வைத்தாற் போலே இருந்தேனே ஸ்ரீராமனுக்கு சுக்கிரீவன் துணிவு கூறல் விருத்தம்-6 இந்தவித மாக ராமச் சந்திரன்மனம் நோகும் வேளை தொந்தம் உளசுக்கிரீவ னுந்துணிவு செப்பு வானே தரு-2 நாட்டைக் குறிஞ்சிராகம் ஆதிதாளம் பல்லவி ஏதுக்கு இந்தவி சாரம் ஏதுக்கித்தனை தூரம் (ஏதுக்) அநுபல்லவி போதும் பிரமாண்டம் அப் புறம்போய் வருகிறேன் சீதையைக் கொண்டுவந்து செணத்தில் தருகிறேன் (ஏது) |