252 சரணங்கள் 1. தருமராமரம் எய்தாய் துந்துமிஎலும்பை தம்பியாலே எறிந்தாய்-சாமி கருதினது தருவேன் என்பலன் உன்பலன் களும் நீயே அறிந்தாய்-ராவணன் ஒருபது தலைகளும் உன்கணைபோலத் தருகிறேன் தருகிறேன் தேவியைக்கைமேலே (ஏது) 2. மின்பணி காட்டி உனக்குநான்இந்த வேதனை காட்டினேன்-சாமி நின்பெருங் கவலையை நீக்க வேணும்சும்மா நேரம்பா ராட்டினேன்-சாமி என்குறை முடிக்கிற தென்ன இதற்குமுன்னே உன்குறை முடிக்கிறேன் ஒருநிமிஷத்திற் சொன்னேன் (ஏது) 3. சுத்தர் ஆகிய மூவர்க்கும் தேவர்க்கும் சூழுமோ படைக் கூட்டம்-என்படை மெத்த உண்டுவரும் வெற்றியும் தரும்இனி மேலென்னமுக வாட்டம் உற்றசீதையை உதவுகிறேன் இதுநிதானம் கற்றுக்கற்றுச் சொல்லிஎன் காரியமல்லவோ பிரதானம் (ஏது) ஸ்ரீராமரை வாலி நிந்தித்தல் விருத்தம்-7 ராமனை இந்தப்படி சுக்கிரீவன் தேற்ற நல்லனுமான் வாலியைக் கொன்றிப்போதிந்தக் கோமகன் சுக்கிரீவன்முடி சூட்டிஎல்லாம் கூடும்என்றான் சுவாமியுமங் கிசைந்தான் அப்பால் பூமகன்வா லியும்தம்பி தானும் சண்டை போடயிலே அய்யன்அம்பு போடச்சாய்ந்து பேய்முகனாய் வாயில் வந்த தெல்லாம் வாலி பேசுவான் ராகவனை ஏசுவானே |