253 தரு-3 சாரங்காராகம் அடதாளசாப்பு பல்லவி ஏனிந்த மதிகுறித்தாய் மறைந்துவாளி எடுத்தென்மேல் ஏன்தெறித்தாய் (ஏனி) அநுபல்லவி மானபூஷணனான தசரதன் உன்னைப்பெற்று வரங்கள் தந்தது நல்லாய் குரங் கைக்கொல்லவோ சொல்லாய் (ஏனி) சரணங்கள் 1. நரர்க்கும் வானவர்க்கும் உண்டோதொந்தம்-முன்பின் ஞாதி வழக்குண்டோ சொல்அது பந்தம் அரக்கன் அழிவுசெய்தால் பல வந்தம்-ஆகி ஆயுதம் இல்லாரை அடிப்பதோஉன் சந்தம் அதுவுமல்லாமல் ஆண்மை சொல்லாமல் எதிரில்நில்லாமல் என்னை வெல்லாமல் (ஏனி) 2. வலிய மரங்கள் ஏழும் தொளைத்தாயே-அந்த வலிமையிருந்தும் எனக் கிளைத்தாயே கலிராசன் போல்வந்து முளைத்தாயே காட்டில் மறைந்து வில்லைகாணாமல் வளைத்தாயே காரியம் இதுசுத்தக் கபடம் உனைப்பெற்ற சூரியகுலம் மெத்தத் துலங்கும்அடபித்த (ஏனி) 3. தன்மம் வளர்க்கவந்த ரகுராமா-பரதன் தனக்கு மூத்தபிள்ளை நீயாமா உன்மனது தான்என்ன மிகநோமா-வாலி உயிரைக்கொண்டால் சீதை ஒழிந்த துயரம்போமா உனக்கு ஞாயமோ என்உபாயமோ எனக்கபாயமோ என்னமாயமோ (ஏனி) வாலி குற்றங்களை அவனுக்கு ஸ்ரீராமர் விரித்தல் விருத்தம்-8 இன்னை வாலி சொல்ல இராகவன் அவனை நோக்கி மின்னையும் கொண்டாய்தம்பி மேதினி தனையும் கொண்டாய் |