பக்கம் எண் :

254

பின்னையும் கொல்லவர்மம் பிடித்திட்டாய் அதனைக் கொண்டே
உன்னைநான் கொல்லொணாதோ உரைஎன்றான் உரைஎன்றானே

தரு-4

அடாணாராகம்                            ஆதிதாளம்

பல்லவி

வடிப்பம் வடிப்பமாய்ப் பேசிக்கொள்ளாதே-அடாவாலி-உன்
வாயை மூடடா ஏண்டா துள்ளாதே                    (வடி)

அநுபல்லவி

கடத்தடா ஈதெல்லாம் ஆயிரங்கால் அரைக்கால்
பணம் அடா கடை கட்டடா                          (வடி)

சரணங்கள்

1. பிலந்தனிலேநீ புகுந்த போதில்உன்
     பின்பல னாமிவன்                    தொடர்ந்ததும்
     பேய்அறைகின் றாற்போலே நீஅறைய இவன் 
     பின்வாங்கிக் கொண்                  டிடைந்ததும்
 தலந்தனிலே அபவாதமாகத்தம்பி
     தாரத்துக்கும் உனக்கும்                நடந்ததும்
     சாபத்தாலே நீஏறாமலைமேலே
     தப்பித் தவறியிவன் அடைந்ததும்       சொல்லாமல்(வடி)

2. வார்த்தைக்கு மாத்திரம் குரங்குரூபம் நீதி
     வகையும் தொகையும் சொல்லி          நிறைக்கிறாய்
     மனதாரச்செய்த வினைபோமோ வீண்
     வார்த்தைகள் ஏன்சொல்லி             இறைக்கிறாய்
  மூத்தவன் தம்பி தாரம் என்றறிந்தும்
     முறைபிசகி நிறை                    குறைக்கிறாய்
     மூடன்போலே வாயாடுகிறாயடா
     முழுப்பூ சனிக்காயும் சோற்றிலே        மறைக்கிறாய் (வடி)

3. அம்பும் கையுமாய் எதிர்நின்றால் உன்தன்
     அபயம் என்று வருவாய்என்           அடிக்கு
     ஆராகிலும் நொந்த பேராகிலும் அடுத்
     தாரைக் கெடுக்கல் ஆமோஎன்         குடிக்கு