255 தம்பித் துரோகி உன்னைச் சித்திரவதை செய்யத் தகுமே நான்பிடித்த பிடிக்கு தர்மத்துக் குள்ளும் பாவத்துக்குப் புறம்புமாய் சரத்தாலே கொல்லத் தொடுத்தேன் இந்தப் படிக்கு (வடி) ஸ்ரீராமரை வாலி வரங்கேட்டுக் கொள்ளல் விருத்தம்-9 மழைநிறத்து ராமனிந்த வாறுசொல்ல வாலியும்சம் மதித்தான் இப்பால் பழையதொரு நினைவுகொண்டான் அறிந்துமறி யாமலும்நான் பதறிச் சொன்னேன் தழையும்மகன் சுக்கிரீவன் அனுமன் உனதடைக்கலம் என் சாமி என்தன் பிழை பொறுப்பாய் எனச்சொல்லிக் கூசுவான் மனுவொன்று பேசுவானே தரு-5 சாவேரி ராகம் ஆதிதாளம் பல்லவி சாமி ரகுராமா-இவர்கள்உன் தஞ்சம் ரகுராமா (சாமி) அநுபல்லவி ஆம்இவாரல் என்னகாணும் ஆகிலும் ராசாங்கம் வேணும் நீமாத்திரம் வெல்ல நினைத்தாற் காரியம் அல்ல (சாமி) சரணங்கள் 1. எனதுமகன் அங்கதன்தான் உனதுபகையை வாட்டுவான் ராட்சத குலங்களை உபேட்சை இல்லாமல் மாட்டுவான் அனுமந்தன் உன்தன் கோதண்டம் எனவிசயங்கள் காட்டுவான் அந்தராவணனை என்போல் தொம்தொம் தொம் என்றாட்டுவான்(சாமி) 2. அந்தத்தில் உன்தனைக்காணத் தந்தானேஇது அல்லாதே அநித்தியம் தனக்கும் நித்தியம் எனக்கும் தந்தானே இப்போதே |