பக்கம் எண் :

256

என்தம்பி சுக்கிரீவன் பிழைதந்தாலும் கிருபை       விடாதே
     என்மேல் தொடுத்தஅம்பை எடுத்தவன்மேலே  தொடாதே (சாமி)

3. நெடுந்தவம் ஏதோஎன்சீவன் விடும்போது கண்டேன்உன்      காட்சி
     நினைக்கொணாப் பரமபதம் எனக்கல்லவோ காணி  யாட்சி
  அடங்கலும் ரட்சிக்கவந்து தொடங்கின நீசர்வ                சாட்சி
     ஆளில்லாப்படை வெட்டுமோ ஐயா உணக்குண்டோ தாட்சி(சாமி)

வாலி சுக்கீரிவனுக்கு மதிசொல்லுதல்

விருத்தம்-10

இன்னவாறு சாமிதன்னை இரங்கி வரங்கொண் டிடும்வாலி
பின்னைஇளைய சுக்கிரீவன் பெருமான் முகத்தை மிகநோக்கிச்
சொன்னேன் இதுநீ கேளென்றான் சுவாமிராமன் இவன் பணியை
எந்நேரமும் செய்எனஅவனை இரந்தான் தனக்கோர் வரந்தந்தான்

தரு-6

மத்தியமாவதிராகம்                        அடதாளசாப்பு

பல்லவி

     ஆதிதேவனே ஸ்ரீராமன் என்று
     அறிசுக்கி ரீவனே                    (ஆதி)

அநுபல்லவி

வேதசாஸ்திர புராணம் எல்லாம் கூடி
விரிப்பதும் இவனே - சொல்லத் - தரிப்பதும் இவனேநல்ல (ஆதி)

சரணங்கள்

1. அடைவுடன் இவன்கையில் விழமுத்தி
     ஆகுமே                      நித்தியம்-பணி
  விடைசெய்தாற் குறைவுண்டோ உனக்கிது
     வேயல்லோ                    பத்தியம்-வேறே
  தொடரும் தெய்வங்கள் என்பதெல்லாம் சும்மா
     சொல்வதேநி                   மித்தியம்-ஒன்றும்
  தடையில்லாப் பிரம்மாதிக் கிர்த்தியம் எல்லாம்
     தப்பாதிவன் கிர்த்தியம் அப்பா சொன்னேன்சத்தியம்(ஆதி)