257 2. மதிஅரசு கொண்டதில் மதங்கொண்டு மயக்கம் பண்ணாதே-எங்கும் எதிர்இல்லா என்னைக்கொன்றான் இவன்போலே ஈடு நண்ணாதே-ஐயன் உதவியை அடிக்கடி எண்ண வேணும் ஒழிக்க ஒண்ணாதே-நன்றி (ஆதி) சிதறி இவன்ஓர் மனிதன் ஆம்என்று திருக்கான புத்தியை ஒருக்காலும் எண்ணாதே (ஆதி) 3. அகலாமல் அணுகாமல் சாமியை அனுதினமும் சுற்றி-இவன் மகிழ்வாக இட்ட வேலைகள் செய்து வருவதே பத்தி-இதைத் இகழாது கொண்டால் இதுவேசித்தி இது வல்லோ வெற்றி-சொல்லி உருகுவ தேன்இனி சகல பாக்கியமும் உருவாய் பரமபதமும் பெறுவாய்இதுவே புத்தி (ஆதி) வாலி இறந்தபின் தாரை புலம்பல் விருத்தம்-11 வாலி இந்த வரங்கொண்டு வளர்வை குந்த பதம்சேர்ந்தான் வேலின் நெடுங்கண் உளதாரை மின்னற்கொடிபோ லேகணவன் பாலில் விழுந்தாள் வானரபூ பதியே கெதியார் எனக்கென்று மேலில் விழுந்தாள் நெடுமூச்சு விடுத்தாள் புலம்பத் தொடுத்தாளே திபதை-5 கெண்டராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. மன்னவனே எங்கள் வாலியேநல்ல வானர பூபதியே இன்னவேளை இந்தமரணம் உனக்கென்று இருந்ததோ தலைவிதியே 2. இறவாமருந்தையும் தருவாயேநீ எப்படி இறந்தாயோ மறாவதேசிவ பூசைசெய்கின்ற வழிபாடு மறந்தாயோ 3. ஆனைக்கும் அடிசருக்கும் துள்ளிவிழல்ஆகா தென்றேனே சேனைத்துரையே நான்உன்னைக் கொடுத்திங்கே தெருவிலேநின்றேனே |