258 4.என்னுயிர்நீ ஆனால்உன்மேலே பாய்ந்தகணை என்மேலே பாயாதோ உன்னுயிர் நான்ஆனால் உன்னுயிரோ டென்னுயிர்கூட மாயாதோ 5.விந்தைமனிதன் கைக்குநீயும் விழுவாயோ வேறொருவலி உண்டோ என்தன் உயிர்இன்னம் இருக்குதே ஐயோஎன்னைப் போல்நீலிஉண்டோ 6. மறைந்துராமன் கணைதொடுக்காமல் உன்மேல்வழக்குத்தொடுத்தாலே குறைந்திடாக்கடல் கடைந்தமுதமும் நீகொடுப்பாயே கைமேலே 7. செய்நன்றியரோ காலதூதர் என்னதேவரோ மறுபேரோ ஐயையோ அவர்க்கமுதமும் உன்னைப்போல் யார்இனித் தருவாரோ 8. நான்அடி உன்தன் பிராணநாதன் என்றநம்பிக்கை பொய் போமோ வானரம்பையர் மேலாசை கொண்டெனைமறந்து விட்டோடல் ஆமோ 9. வன்னமேருமுதல் மலையில்உன்கால் வைத்த வடுவுகள்இனிப்போச்சே நின்னை மறைந்தம்பு போட்டராகவன் நீதிக்குவடு வாச்சே 10. மருந்தமுதுதந்த சாமிவந்தான் என்று மகிழ்ந்துதேவர் கண்டாரோ விருந்தமுது செய்யாய் என்றே உன்னைவேண்டி எதிர் கொண்டாரோ ஸ்ரீராமர் சுக்கிரீவனுக்கு ராஜநீதி கூறுதல் விருத்தம்-12 கொம்பனையாள் தாரைஇவ்வா றகன்றாள்அங் கதன்ஐயன் கூர்வாட்கொண்டான் தம்பிஇளை யவன்கையால் முடிசூட்டச் சுக்கிரீவன் தரித்துக்கொண்டான் பின்புரகு ராமனிரு பதத்தினில்வந் தவன்பணிந்தான் பிறகு சாமி அம்புவியை ஆளும்வகை தெருளுவான் புத்திசொல்லி அருளு வானே |