பக்கம் எண் :

259

தரு-7

சௌராஷ்டிரராகம்                    அடதாளசாப்பு

பல்லவி

அரசுசெய் வதென்ன-எறிந்துபோட்ட-தல்லடா சுக்ரீவா            (அ)

அநுபல்லவி

நிருபன்என்றே போதே கெர்வம்   மெத்தகாணும்
நெருப்பாறும் மயிர்ப்பாலமுமா     நடக்கவேணும்               (அர)

சரணங்கள்

1. கோல மன்னவருக்குச்                   சதுரங்கம்-செங்
     கோலைப் போலத்தருமோ            உத்துங்கம்
  நாலு திசைக்குள்ள                     ஆதங்கம்-தீர்த்து
     நடத்துவல்லவன் அல்லோ           துரைசிங்கம்
  ஆலகால துஷ்டர் உறவென்று           துள்ளாதே
     அனுமானைப் போல்ஒத்த அமைச்சரை விள்ளாதே
  காலந்தெரிந்த பேரியோர்களைத்         தள்ளாதே
     கால்போகா இடத்திலே தலையிட்டுக்   கொள்ளாதே         (அர)

2. மங்கையர் களுடனே                  சூட்சி-கொண்ட
     மன்னவர்க் கவமானம் காணி யாட்சி
  எங்கள் இடத்தில் அந்த               அத்தாட்சி-போதும்
     இதைவிட இனிவே                 றேன்சாட்சி
  உங்கள் வாலியும் மங்கைய ரால்முனை    சிந்த
     உருண்டானே அறிந்தாயே முந்த      முந்த
  செங்கோல் கோணினால் எங்கும்கோணும்  அந்த
     தேசத்து நன்மைதுன்மை ராசருக்கல்லோ இந்த (அர)

3. பண்ணிய தீமையி னால்ஒரு                கூனி-என்னைப்
     பரதேசி ஆக்கினாளேஅவ               தானி
  எண்ணி எளியவரை அது                   போல்நீ-சரியா
     எதிரிட்டுக் கொண்டால் அதுவே          ஆனி
  உண்மையாக இன்னம் உறிதிசொல்வேன்       இப்போது
     ஓருத்தர் செய்தஉதவியை மறக்கில்அதுவே  தீது
  மண்ணில் இருந்து வழக்கோரம் சொல்        லொண்ணாது
     மயிரைப் பிளந்து விவகாரங்களை         ஓது            (அர)