பக்கம் எண் :

262

7. சொன்னேன் குறையில்லை சுகம்இனி  மீதே
  அன்னை சீதையும் வரல் ஆச்சுதிப்   போதே    (சாமி)

சுக்கிரீவன் தாமசங்கண்டு ஸ்ரீராமர் கோபித்தல்

விருத்தம்-15

மதிமானான தம்பியிந்த வகையே சொல்ல ராமச்சந்திரன்
இதிலே தெளிந்தே சானகிபோய் இருக்கும் இடமெவ் விடங்காணேன்
சதியால் நமது சுக்ரீவன் சரற்காலமும்போய் வரக்காணேன்
விதியால் அவனை அழையென்றே விடுத்தான் கோபம் எடுத்தானே

தரு-9

அசாவேரிராகம்                               ஆதிதாளம்

பல்லவி

வருகிறானோ வாரானோ-சுக்கிரீவன்
     மனதை அறிந்து வாராய் தம்பீ              (வருகி)

அநுபல்லவி

     திருகுசொன்னால் அவன் குலம்ஒன்றும் வெட்டுவேனே
     சித்திரத்தினும் குரங்கை வைத்தெழுத ஒட்டுவேனோ  (வரு)

சரணங்கள்

1. தருணத்தில் உதவியை மறந்தானே                 மதங்கொண்டு
     தண்ணீரும் முக்காற்பிழை பொறுக்கும் அல்லவோ கண்டு
  மரபுக்குச் சற்றே இன்னம் பார்க்கவேணுமே          பண்டு
     வாலியைக்கொன்ற அம்புபோல் ஆயிரம் அம்புகள் உண்டு

2. கரத்தாலே அபயம் கொடுத்தவன் தன்னை       வன்னக்
     கனகசிங் காதனத்தில் வைத்தோமே          மின்ன
  சரற்காலம் போனவுடன் வருகிறேன் என்று       சொன்ன
     சத்தியம் மறந்தவனைச் சித்திரவதை செய்தால்  என்ன (வரு)

3. அரிய மராமரங்கள் தொளைத்த               ராமன்வில்லை
     அறிவாயோ அறியாயோ என்றுகேள்        ஒருசொல்லை
  ஒருமசகம் இவனை அடிப்பதற்                கென்னதொல்லை
     உண்மையாக எனக்கவன் சம்மதி           தெரியஇல்லை (வரு)