264 லட்சுமணர் சுக்கிரீவனை இடித்தல் விருத்தம்-16 மன்னனாம் சுக்கிரீவன் மதுவினால் மயங்கிவிட்டேன் என்னவே சுருக்காய்வந்தான் எதிர்கண்டதம்பி சொல்வான் சொன்னநாள் தவறிஇந்த துடுக்குநீர் செய்தீர்சிந்தை இன்னம் ஏதென்றுகோபம் எழுகின்றான் மொழிகின்றானே தரு-11 சௌராஷ்டராகம் ஆதிதாளம் பல்லவி வந்தகாரியம் இதுகாண்-சுக்கிரீவரேநான் வந்தகாரியம் இதுகாண் (வந்த) அநுபல்லவி வந்தகாரியம் இது வாலியைக்கொன்ற அப்போது வருவேனென்று வணங்கி ராகவனுக்கன்று மழைநாட்போய் தந்துரை ஆடி அகந்தைகள்மூடி இருந்ததை நாடி அறிந்திடஓடி (வந்த) சரணங்கள் 1. அங்கென்சாமி நொந்திருக்க அதுகண்டென் நெஞ்சை உருக்க அலைந்தலைந் தென்கால் பெருக்க அசந்துங்கள் ஊரை நெருக்க வங்குவாசலைப் பிடித்தேன் அடைத்தகல்லைத் துங்கிசமாக இடித்தேன் வானரங்களை அங்கங்கேஓட அடித்தேன் தாயைக்கண்டு உங்காரவார்த்தை படித்தேன் அவள்சொன்னது இங்கிதோ வருவார் ஏன்இனிஇந்த விசாரம் என்றாள்பிறகே தங்கியவாள் அனுமானும் வந்தான் அந்தநேரம் யாம்உம்மடிமை உங்கள்உதவி மறவோம் என்றான் உபசாரம் நீரும் மெய்போலே எங்கோமான் மலர்க்கை தொட்டீர் இருமாசம் தவணைஇட்டீர் ஏன்காணும் வாராமல் விட்டீர் எப்படிநினைவு கெட்டீர் இங்கிதமாகிய வங்கம்முறிய விங்களம் நீர்செய்த சங்கையைஅறிய (வந்த) |