பக்கம் எண் :

265

2. அஷ்டலெட்சுமிக்கும் அன்னைஆகிய சனகிமுன்னை
  அகலவிட்டசாமி தன்னை அறிந்தும் அவனாலே பின்னை
     விட்டூரம்சூழ வைத்தீரே சொன்னநாளில்வந்
     தெட்டாமல்தாழ வைத்தீரே ராட்சதர் இன்னும்
     நெட்டாகவாழ வைத்தீரே தேவரைஎல்லாம்
     பொட்டாகவீழ வைத்தீரே இந்தசாமிக்கும்

எட்டிய பலசாலிகள் இருந்தால் அங்கேசேரும் பிரம்மாதிதேவர்
மட்டிலும் ஓர்திசை எட்டினில் வீரர்எல்லாரும் வரட்டும் சிங்கக்
குட்டிகள் முன்னே நரிக்குட்டிகள் ஆக்குவேன் பாரும் பிறகாகிலும்
சட்டமான தளத்துடன் நீர்வாரும் அணுகெட்டாமல்

     அட்டி செய்வாலியை முட்டஅடித்துவெகு ராச்சியம்கட்ட
     அரசு மணிமுடியிட்ட ஆண்டவன் உரைக்கப்பட்ட
          கட்டளை என்கிற மட்டுகள் தாண்டி
          தட்டிய உங்களை வெட்டிட வேண்டி         (வந்த)

3. கர்த்தன் உண்டபின் உச்சிட்டங் கொண்டுண்பதே என்அதிருஷ்டம்
  காய்கனி நீர்தந்தால் இஷ்டம் காணுமோ இதென்ன கஷ்டம்
     புத்திதான்எங்கே போச்சோ ஐயனைப் பசியில்
     வைத்தும்நான் உண்ப தாச்சோ ஐயையோ உங்கள்
     பத்திஎல்லாம் மேற் பூச்சோ சகாயத்துரோகம்
     கற்றவர்க் கித்தனை பேச்சோ என்அண்ணனான

உத்தமனுக்குத்துணை மற்றுண்டோ ஒருவரைக் கொண்டு கோதண்டம்
                                              தன்னை
சற்றேவளைக்குமுன் செத்தானே வாலியும் பண்டு அவனைக் கொன்ற
அஸ்திரம்போல் இன்னம் அஸ்திரம் அனேகங்கள்உண்டுதெரிந்திருந்தும்
இத்தனைநீர் செய்ததென்ன இளக்காரம் கண்டுகாரியங் கொள்ளச்
     சுற்றிநீரே பிரியாமல் துரோகபுத்தி அறியாமல்
     சொன்னநாளைக் குறியாமல் தோஷம் என்று அறியாமல்
     சத்தியமோ சொல் அசத்தியமே தான்
     முற்றிலும் நாடி இடத்தனி யேநான்           (வந்த)

வானரப்படைத் தலைவர்களும் படைத் தொகையும்

விருத்தம்-17

அடல்சேர்  தம்பி இதுசொல்ல அறிந்தேன் அடியேன் புத்தியென்று
உடனே சுக்கிரீவன்சாமி உபயபாதம் வந்து கண்டான்