267 கைக்கான மயேந்திரம் சேர்அனுமான் தன்னைக்      கதிசெய்வான் சாம்புவனும் துதிசெய்வானே திபதை-8  கேதராகௌளராகம்                        திரிபுடைதாளம் கண்ணிகள் 1. ஏதுகாணும் சும்மா அறிந்தும் அறியார்போல்      இருக்கிறீர் ஆஞ்ச                       நேயரே   ஓதுமேன் வெண்ணெய் இருக்க நெய்தேடு      வோமோ வாதராசன்                 சேயரே      2. காதலால் நல்ல காலம் பிறந்தது      காணாது கண்டவர்                   போலவே   சீதை சேதிசம் பாதி வாயினால்      தெரிந்து கொண்டோ மே             சாலவே      3. துணியுமேன் உமக்கிலங்கை தான்என்ன      தூரமோ கடல்                      தூரமோ   அணுவும் மகமேரு ஆகும் மேருவும்      அணுவாம் உமக் கென்ன              பாரமோ      4. வருத்தம் ஏன் இலங்கையும் உம்முடவாலால்      மாட்டி இழுத்தாலும்                  செல்லுமே   திருத்தம் என்னபேச்சு விளக்கிருக்கத் தீ      தேடுவோமோ நாங்கள்               சொல்லுமே      5. ஒருத்தராய்ப் பிரம்ம தேவன் பட்டமும்      உமக்கென்றே புகழ்                  மேவினீர்   குருத்துக் குழந்தையில் சூரியன் தேர்நிலை      குலைய எதிர்கொண்டு                தாவினீர்      6. வாசவன் கைவச்சி ராயுதத்தால் ஓர்பால்      மயிரும் உதிராத                     வீரரே   தேசம்மேல் எந்த ஆயுதங்களாலும்      சிந்தை கலங்காத                    சூரரே      7. இயற்கையால் எந்த வேஷம் எடுக்கினும்      எடுக்கவே வல்ல                    தேவரே    |