பக்கம் எண் :

268

  செயித்திடாதபஞ் சேந்திரியங்களையும்
     செயித்திடும் மானு                   பாவரே

8. ஓதும் சுக்ரீவன் ஆக்கினை தெரியுமே
     உயிரை வைப்பானோ                நாளையே
  காதுக்கிடுவது முகத்துக் கழகெங்
     களைரட்சிப்பீர் இந்த                 வேளையே

9. எட்டுத்திக்கின் அப்புறத்தினிலே கங்கை
     இருக்கினும் பாய்ந்து                  கூடுவீர்
  கொட்டைப் பாக்குப்போல் எட்டுமலையையும்
     தொட்டெ டுத்துவிளை                யாடுவீர்

10. அமைத்த சாமிமோ திரத்தைப் பிடித்தீரே
     ஆர்க்குண்டிந்த அதி                 காரமே
  உமக்கில்லாப் பொறி எமக்கு வந்ததோ
     உரைப்ப தேன்உப                   சாரமே

அனுமார் கடல்தாண்ட இசைதல்

விருத்தம்-19

பாட்டில் உரைக்கும் அங்கதன்முன் படித்துச்சாம்பன் துதிசெய்யக்
கேட்ட அனுமான் மிகநாணிக் கேளீர் அடியேன்தனைப் பொருட்டாக்
கூட்டிநீர் எவுதலாலேஎங் கோமான் அருளும் உமதருளும்
ஈட்டும் சிறையால் கடல்கடப்பேன் என்றான்புலனை வென்றானே

கிஷ்கிந்தாகாண்டம்

முற்றிற்று

விருத்தம்-19-கொச்சகம்-1-திபதைகள்-8-தருக்கள்-11

சக்கரவர்த்தித்திருமகனார் திருவடிகளே சரணம்.