269 ஸ்ரீ நான்காவது கிஷ்கிந்தா காண்டம் (கம்பராமாயணம் ஒப்புமைப் பகுதி) அனுமார் மறைந்துநின்று யோசித்தல் விருத்தம்-1-திபதை-1 எய்தினார் சவரி நெடிதேய மால்வரை எளிதின் நொய்தின் ஏறினர் அதனின் நோன்மைசால் கவியரசு செய்வதோர்கிலன் அனையர் தெவ்வராம் எனவெருவி உய்தும் நாம்என விரைவின் ஓடினான் மலைமுழையின் அஞ்சனைக்கொரு சிறுவன் அஞ்சனக்சிரி அனைய மஞ்சனைக் குறுகிஒரு மாணவப் படிவமொடு வெஞ்சமத் தொழிலர் தவமெய்யர் கைச்சிலையர் என நெஞ்சயிர்த்து அயல்மறைய நின்று கற்பினின் நினையும் தேவருக்கொரு தலைவர் ஆம்முதல் தேவர் எனின் மூவர்மற்றிவர் இருவர் மூரிவில் கார்இவரை யாவர் ஒப்பவர் உலகில் யாதிவர்க் கரியபொருள் கேவலத் திவர்நிலைமை தேர்வது எக்கிழமை கொடு சிந்தையில் சிறிதுதுயர் சேர்வுறத் தெருமரலின் நொந்தயர்த்தவர் அனையர் நோவறச் சிறியர்அலர் அந்தரத்து அமரர்அலர் மானிடப் படிவர்மயர் சிந்தனைக்குரிய பொருள் தேடுதற்கு உறுநிலையர் தருமமும் தகவும் இவர்தனம் எனும் தகையர்வரு கருமமும் பிறிதோர் பொருள்கதியன்று அதுகருதின் அருமருந் தனையது இடைஅழிவு வந்துளது அதனை இருமருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள் கதம்எனும் பொருண்மையிலர் கருணையின் கடலனையர் இதமெனும் பொருளலதுஓர் இயல்புணர்ந்திலர் இவர்கள் |