பக்கம் எண் :

270

சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர்
மதனன் அஞ்சுறு வடிவர் மறலிஅஞ்சுறு விறலர்

என்பன பலவும்எண்ணி இருவரை எய்தநோக்கி
அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத் தோரை
முன்பிரிந் தனையர்தம்மை முன்னினான் என்னநின்றான்
தன்பெருங் குணத்தால் தன்னைத் தானலது ஒப்பிலாதான்.
                                     (அனுமப்படலம் 1, 4, 9)

அனுமார் ஸ்ரீ ராமருக்கு வரலாறு கூறுதல்

விருத்தம்-2 - தரு-1

இவ்வகை எண்ணி ஆண்டவ் இருவரும் எய்த லோடும்
செவ்வழி உள்ளத்தானும் தெளிவுற எதிர்சென் றெய்தி
கவ்வையின் றாக நுங்கள் வரவு என் கருணையோனும்
வெவ்வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான்

மஞ்செனத் திரண்ட கோலமேனிய மகளிர்க் கெல்லாம்
நஞ்செனத் தகையதாகி நளிர் இரும் பணிக்குத் தேம்பாக்
கஞ்சமொத் தலர்ந்த செய்ய கண்ணயான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுன் என்பேன்

இம்மலை இருந்து வாழும் ஏரிகதிர்ப்பருதிச் செல்வன்
செம்மலுக் கேவல்செய்வேன் தேவநும் வரவு நோக்கி
விம்மலுற் றனையான்ஏவ வினவிய வந்தேன் என்றான்
எம்மலைக் குலமும் தாழ இசைசுமந் தெழுந்த தோளான்

எவ்வழி இருந்தான் சொன்ன கவிக்குலத் திறைவன் யாங்கள்
அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தேம்
இவ்வழி நின்னை உற்ற எமக்குநீ இன்று சொன்ன
செவ்வழி உள்ளத்தானைக் காட்டுதி தெரிய என்றான்

இரவிதன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும்
பரிவிலன் சீறப்போந்து பருவரற்கு ஒருவனாகி
அருவியங் குன்றில் என்னோ டிருந்தனன் அவன்பால் செல்வம்
வருவதோர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர்

ஒடுங்கலிவ் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி
தொடங்கினர் முற்றும் முற்றத் தொல்லறம் துணிவர் சான்றோர்