271 கொடுங்குலப் பகைஞனாகிக் கொல்லிய வந்த கூற்றை நடுங்கினர்க் கபயம் நல்கும் அதனினும் நல்லதுண்டோ எம்மையே காத்திர் என்றற் கெளிதரோ இமைப்பிலாதோர் தம்மையே முதலிட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் மும்மை ஏழ்உலகும் காக்கும் முதல்வர்நீர் முருகற்செவ்வி உம்மையே புகல்புக்கேமுக் கிதின்வரும் உறுதியுண்டோ யாரென விளம்புகேன்நான் எங்குலத் தலைவற்கும்மை வீரநீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலிபோல்வான் வார்கழல் இளையவீரன் மரபுளி வாய்மை யாதும் சோர்விலன் நிலைமைஎல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான் (அனுமப்படலம் 14-16, 20, 22-25) அனுமார் தேற்றச் சுச்கிரீவன் சரணடைதல் விருத்தம்-3 - திபதை-2 சூரியன் மரபிற் றோன்றிச் சுடர்நெடு நேமிஆண்ட ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவியுண்ட வீரியன் வேள்வி செய்து விண்உலகோடும் ஆண்ட காரியல் கருணை அன்ன கண்ணகன் கவிகைமன்னன் புயல்தரு மதத்தின் கோட்டுப்புகர்மலைக் கிறையை ஊர்ந்து மயல்தரும் அமரர்யாரும் மடிதர வரிவிற் கொண்ட இயல்தரும் புலமைச் செங்கோல் மனுமுதல் எவரும் ஒவ்வாத் தயரதன் கனகமாடத் தடமதில் அயோத்தி வேந்தன் அன்னவன் சிறுவனால் இவ் ஆண்டகை அன்னைஏவ தன்னுடை உரிமைச் செல்வம் தம்பிக்குத் தகவின்நல்கி நன்னெடுங் கானஞ் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான் இந்நெடும் சிலைவலானுக்கு ஏவல்செய் அடியென் யானே (அனுமப்படலம் 26-28) மேலவன் திருமகற் குரைசெய்தான் விரைசெய்தார் வாலிஎன் றளவிலா வலியினான் உயிர்தெறக் காலன்வந்தனன் இடர்க் கடல்கடந்தனம் எனா ஆலம் உண்டவனின்று அருநடம் புரிகுவன் |