பக்கம் எண் :

272

வேலிகல் சினவு தாடகை விளிந்துருள வில்
கோலி அக்கொடுமையாள் புதல்வனைக் கொன்றுதன்
காலியல் பொடியினால் நெடியகற்படி வமாம்
ஆலிகைக் கரியபேர் உருவளித் தருளினான்

நல்லுறுப் பமையும் நம்பியரில் முன்னவன் நயந்து
எல்லுறுப் பிரியபேர் எழுசுடர்க் கடவுள்தன்
பல்லிறுத்தவன் வலிக்கு அமைதியம்பகம் எனும்
வில்லிறுத் தருளினான் மிதிலைபுக் கனையநாள்

தெவ்விரா வகைநெடுஞ் சிகைவிரா மழுவினான்
அவ்விரா மனையும் மாவலி தொலைத் தருளினான்
இவ்விரா கவன்வெகுண்டு எழும்இரா அனையன்ஆம்
அவ்விராதனை இராவகை துடைத்தருளினான்

ஆயமாநாகர் வாழ் ஆழியானே அலால்
காயமான் ஆயினான் அவனோ காவலா
நீயமான் நேர்தியால் நிருதமாரீசனாம்
மாயமா னாயினான் மாயமானாயினான்

முனைவரும் பிறரும்மேல் முடிவரும் பகலெலாம்
இனையர்வந் துறுவர்என்று இயல்தவம் புரிகுவார்
வினையெனும் சிறைதுறந்து உயர்பதம் விரவினார்
எனையர் என்றுரைசெய்கேன் இரவிதன் சிறுவனே

மாயையால் மதியிலா நிருதர்கோன் மனைவியைத்
தீயகான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார்
நீஐயா தவமிழைத் துடைமையால் நெடுமனம்
தூயையா உடையையால் உறவினைத் துணிகுவார்
                         (நட்புக்கோட்படலம் 2, 6, 7, 9, 11, 13, 14)

ஸ்ரீராமர் சுக்கிரீவனுக்கு ஆதரணை சொல்லல்

விருத்தம்-4-திபதை-3

எனநினைந் தினைய என்ணி இவர்கின்ற காதல் ஓதக்
கனைகடல் கரைநின்றேறாக் கண்ணினை களிப்பநோக்கி
அனகனைக் குறுகினான் அவ்அண்ணலும் அருத்திகூரப்
புனைமலர்த் தடக்கை நீட்டிப் போந்தினி திருத்திஎன்றான்